Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜம்மு-காஷ்மீர்: என்கவுன்டரில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டர் தாக்குதலில், தீவிரவாதிகள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவிவருகிறது. இந்நிலையில், ஜம்மு- காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தின் சோப்பூர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் என்கவுன்டர் தாக்குதலில் ஈடுபட்டனர். அதில், தீவிரவாதிகள் மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதேபோல, தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாவட்டத்தின் எல்லையோரப் பகுதிகளில், கடந்த சில வாரங்களாக மாநில போலீஸாரும் மத்தியப் பாதுகாப்புப் படையினரும் தொடர் என்கவுன்டர் தாக்குதலில் ஈடுபட்டுவருகின்றனர். அதில், பாரமுல்லா மாவட்டத்தில் நடந்த அதிரடித் தாக்குதலில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் மத்தியப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதேபோன்றதொரு என்கவுன்டர் தாக்குதலில்தான், சில நாள்களுக்கு முன்னர் புல்வாமா மாவட்டத்தில் ஹக்ரிபுரா என்ற சிறிய கிராமத்தில் லஸ்கர்-இ-தொய்பா கமாண்டர் அபுதுஜானாவைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close