Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மழை வேண்டி மத்தியப்பிரதேசத்தில் திருமணம் செய்துகொண்ட ஆண்கள்

மழை வேண்டி மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் ஆண்கள் இருவர் திருமணம் செய்துகொண்டனர். 

திருமணம் செய்துகொண்ட ஆண்கள்

வட மாநிலங்களின் சிலப் பகுதிகளில் கடும்வறட்சி நிலவி வருகிறது. வறட்சியைப் போக்கி மழை பெய்ய வேண்டி பல்வேறு வழிபாடுகள் அங்கு நடத்தப்படுவதுண்டு. தமிழகத்தின் பல பகுதிகளில் மழைக்காக நாய்களுக்குத் திருமணம் செய்யும் வழக்கம் காணப்படுவதுண்டு. இந்தவகையில், இந்தூரின் முஷாகேதி பகுதியைச் சேர்ந்தவர்கள் மழையின் கடவுளான இந்திரா தேவியை சமாதானப்படுத்தும் நோக்கில் ஆண்கள் இருவருக்குத் திருமணம் செய்துவைத்துள்ளனர். இந்தத் திருமணத்தில் மணப்பெண் என யாரும் கிடையாது, அவர்கள் இருவருமே மணமகன்கள்தான் என்று விளக்கம் கொடுக்கிறார்கள் இந்தூர் பகுதி மக்கள்.

பாலிவுட் பாடல்களுக்கு நடனம், முக்கிய சாலைகளில் பவனி என அந்தத் திருமணம் வெகுவிமரிசையாக நடத்தப்பட்டுள்ளது. மேற்கத்திய கலாசாரத்தைப் பின்பற்றும் நடைமுறை இந்தியாவில் பரவலாகிவரும் நிலையில், ஆண்களுக்குத் திருமணம் செய்துவைத்தால் இந்திராதேவியின் அருளால் இந்தூர் பகுதியில் நல்ல மழை பொழிவு இருக்கும் என்ற நம்பிக்கையில் திருமணத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் அந்தப் பகுதி மக்கள் கூறுகிறார்கள். திருமணம் செய்துகொண்ட ஆண்கள் இருவருக்கும் ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. 

- தினேஷ் ராமையா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close