Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராகுல் காந்தி கார்மீது தாக்குதல்: பா.ஜ.க தொண்டர் கைது!

குஜராத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கார்மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பா.ஜ.க தொண்டர் ஒருவரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். 

ராகுல் காந்தி கார் மீது தாக்குதல்

குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ராகுல் காந்தி நேற்று பார்வையிட்டார். ராகுல் காந்தியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கறுப்புக் கொடி காட்டியும், பிரதமர் மோடிக்கு ஆதரவான வாசகங்களையும் வைத்துக்கொண்டு பா.ஜ.க தொண்டர்கள் கோஷமிட்டனர். தானேரா பகுதியில் ராகுலின் பாதுகாப்பு வாகனத்தின்மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்ட காங்கிரஸ் கட்சி, தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தையும் பதிவு செய்தது. இந்தத் தாக்குதலின் பின்னணியில் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆகிய அமைப்புகளே இருப்பதாக ராகுல் காந்தி நேரடியாக குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகார் குறித்து விசாரித்து வந்த குஜராத் போலீஸார், தானேரா பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க தொண்டர் ஜெயேஷ் டார்ஜி என்பவரைக் கைதுசெய்துள்ளனர். ராகுல் காந்தியின் பாதுகாப்பு வாகனம்மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

தினேஷ் ராமையா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close