Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரெவெஞ்ச் பார்ன் குற்றத்துக்காக இந்தியாவில் தண்டனை தரப்பட்ட முதல் வழக்கு! #RevengePorn

revengeporn

ஆங்கிலத்தில் RevengePorn என்றொரு சொல் உண்டு. பெண்களைப் பழி வாங்குவதற்காக அவர்களை இழிவுப்படுத்தும் நோக்கில் இணையத்தில் அவர்கள் படங்களையோ, வீடியோக்களையே வெளியிடுவதுதான் ரிவெஞ்ச் பார்ன். இது போன்ற சம்பவங்கள் உலகம் முழுவதுமே தினமும் நூற்றுக்கணக்கில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்தியாவிலும் கூட. ஆனால், அதில் தொடர்புடைய யாருக்கும் சட்டப்படி தண்டனை கிடைக்கவில்லை; சென்ற வாரம் வரை.

ஒடிஸா மாநிலம், பூரி நகரின் மாஜிஸ்ட்ரேட் முதல் முதலாக இப்படியொரு வழக்கில் குற்றவாளிக்குத் தண்டனை தந்து தொடங்கி வைத்திருக்கிறார். ஷிபாஸிஸ் கிரி என்ற அந்த மாஜிஸ்ட்ரேட், ஜயந்த் குமார் தாஸ் என்ற குற்றவாளிக்கு 6 வருட கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்திருக்கிறார்.

ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த குற்றவாளி ஜயந்த் குமார் தாஸ் ஒரு சமூக செயற்பாட்டாளாராக  அறியப்பட்டவர். அவருக்கும் உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவருக்கும் பிரச்னை வந்திருக்கிறது. அந்தப் பிரச்னைக்குப் பழிவாங்கும் விதமாக பத்திரிகையாளருடைய மனைவியின் படங்களைப் பயன்படுத்திருக்கிறார். அவரது படங்களை வைத்து பார்ன் தளம் ஒன்றில், ஒரு ஃபேக் புரொஃபைலை உருவாக்கியிருக்கிறார். அதில் அவரின் நிஜ முகவரி மற்றும் மொபைல் எண்களைப் பகிர்ந்திருக்கிறார். அதன்பின் பத்திரிகையாளரின் மனைவிக்கு வரிசையாக அழைப்புகள் வர ஆரம்பித்தன. 

பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, 2012 டிசம்பர் மாதம் ஜயந்த் கைது செய்யப்பட்டார். அவர் மீது Indian Penal Code and Information Technology Act, 2000. Sections 292, 465, 469, 500 of the Indian Penal Code மற்றும் 66(C) and 67A of the Information Technology Act ,2000(cyber law of India) ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டன. பலகட்ட விசாரணைகளுக்குப் பிறகு, சென்ற வாரம் ஜயந்த் குமாருக்கு 6 ஆண்டுகால கடுங்காவல் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது. 

revengeporn

மற்ற பிரிவுகளைப் பற்றி தெரிந்துகொள்ள

"ரெவெஞ்ச் பார்ன்" (Revenge Porn) உலக அளவில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. ஒருவருக்குத் தெரியாமல் அவர் இடம்பெற்றிருக்கும் "உடல் நெருக்கக் காட்சிகளை" பொதுப் பார்வைக்கு, சமூக வலைதளங்களின் மூலம் வைக்கப்படுவது. பெண்களுக்கு இது பெரும்பாலும் மரண தண்டனையாக இருக்கிறது. இதுபோன்ற பிறரின் அந்தரங்கக் காட்சிகளை மீள் பதிவு (Re Post)  செய்வதையும், பகிர்வதையும் ( Share ) தடுக்க உலகம் முழுக்க இயங்கும் 150 பெண்கள் பாதுகாப்பு இயக்கங்களோடு இணைந்து சில முயற்சிகளை ஃபேஸ்புக் சில மாதங்களுக்கு முன்பு முன்னெடுத்தது.

ஆன்லைனில் நடக்கும் பல பிரச்னைகளுக்கு நம் நாட்டின் இன்னமும் தெளிவான முடிவுகள் கிடைப்பதில்லை. ஒவ்வொரு குற்றச்செயலுக்கும் இ.பி.கோ வில் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை நடைமுறையில் இருக்கிறதா என்பதே மிகப்பெரிய கேள்வி. ஒடிஸா மாநில மாஜிஸ்ட்ரேட் தந்திருக்கும் இந்தத் தீர்ப்புக்குப் பிறகு, இதுபோன்ற வழக்குகளின் குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close