Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உ.பி-யில் இலவச உணவகம்: 13 ரூபாயில் ஒரு நாள் உணவு!

யோகி ஆதித்யநாத்


த்திரப்பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றப் பிறகு, அதிரடியான பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக,13 ரூபாய்க்கு மூன்று வேளை உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 'அன்னப்பூர்ணா கேன்டீன்' என்ற பெயரில் அறிமுகமாகும் இத்திட்டப்படி, காலை உணவு மூன்று ரூபாய்க்கும் மதிய மற்றும் இரவு உணவு ஐந்து ரூபாய்க்கும் வழங்கப்படும் என உத்திரப்பிரதேச அரசு தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பு வெளியான மார்ச் மாதத்திலிருந்து, இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான வேலைகள் வேகமாக நடைபெற்றுவந்தன. மேலும், "அரசாங்கத்தினால் தொடங்கப்படும் இத்திட்டம், பின்னர் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும்" என முதல்வர் யோகி ஆத்யநாத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் இலவச உணவகம் தொடங்கும் புதிய முடிவை அம்மாநில அரசு எடுத்திருக்கிறது. 'பிரபு கீ ரசோய்' (கடவுளின் சமையலறை) என்ற பெயரில் தொடங்கப்படவுள்ள இந்த இலவச உணவகத் திட்டத்தை, சஹாரன்பூரில் வரும் 9-ம் தேதி சோதனை அடிப்படையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின்படி, தனியார் நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் அளிக்கும் நன்கொடை உதவியால் தினசரி 300 பேருக்கு இலவச உணவு அளிக்கப்படவிருக்கிறது. இந்த உணவகத்தை நிர்வகிப்பதற்கு அரசு அதிகாரிகள், பொதுமக்கள் அடங்கிய சுமார் 300 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் செயல்பட்டுவரும் 'அம்மா உணவகம்' திட்டத்தை மிஞ்சும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிறது. சோதனை முறையில் செயல்படும் இந்த உணவகம் வெற்றிபெறும் பட்சத்தில், மாநிலத்தின் பல இடங்களிலும் இத்திட்டப்படி இலவச உணவகங்கள் விரிவுபடுத்தப்படும் எனத் தெரிகிறது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close