Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெளிநாட்டுப் பயணங்களின்போது பாதுகாப்பை மறுப்பது ஏன்? ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சரமாரி கேள்வி

'சிறப்பு பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள ராகுல் காந்தி, வெளிநாட்டுப் பயணங்களின்போது பாதுகாப்பை மறுப்பது ஏன் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். 


குஜராத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடச் சென்ற ராகுல் காந்தியின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம், அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக, பா.ஜ.க தொண்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மூன்று நாள்கள் விடுமுறைக்குப் பின்னர் நாடாளுமன்றம் இன்று கூடியதும், மக்களவையில் இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி எழுப்பியது.

இந்த விவகாரம் தொடர்பாகப் பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராகுல் காந்திக்கு சிறப்புப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. போலீஸார் கொடுத்த வாகனத்தில் அவர் பயணிக்கவில்லை. பாதுகாப்புக் காரணங்களுக்காக போலீஸார் கூறிய அறிவுரைகளை ராகுல் காந்தி கேட்கவில்லை. தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஒருவரைக் கைதுசெய்து, குஜராத் அரசு விசாரணை நடத்திவருகிறது.

சிறப்பு பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள ராகுல் காந்தி, வெளிநாட்டுப் பயணங்களின்போது பாதுகாப்பை மறுப்பது ஏன். கடந்த 2 ஆண்டுகளில் 6 வெளிநாடுகளுக்கு 72 நாள்கள் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர், எந்த நாட்டுக்குச் சென்றார் என்பதை அறிய விரும்புகிறோம். இந்தப் பயணங்களின்போது பாதுகாப்பை மறுப்பதன்மூலம், எந்த ரகசியத்தை அவர் பாதுகாக்க விரும்பினார் என்று ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பினார். இந்த விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.  

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close