Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இளம் பெண்ணைப் பின் தொடர்ந்த விவகாரம்..! ஹரியானா மாநிலத் பாஜக தலைவருக்கு நெருக்கடி

ஹரியானா மாநில பா.ஜ.க தலைவர் சுபாஷ் பராலாவின் மகன் தன்னை கடத்த முயற்சி செய்ததாகப் பெண் குற்றம்சாட்டியுள்ள விவகாரத்தில் காவல்துறையினர் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்துவருகின்றனர்.


ஹரியானா மாநில அரசு உயரதிகாரியின் மகள் வார்னிகா குன்டு. அவர் அவருடைய ஃபேஸ்புக்கில் பக்கத்தில், ஆகஸ்ட் 4-ம் தேதி இரவு காரில் வந்த ஒருவர் என்னை வழிமறித்ததாகவும், என்னுடைய காரின் கதவை அவர் திறக்க முயற்சி செய்தார் என்றும் நல்லவேளையாக நான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்படவில்லை' என்றும் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு மிகவும் வைரலானது.

இந்த விவகாரம் தொடர்பாக சுபாஷ் பராலாவின் மகன் விகாஷ் பராலா மற்றும் அவரின் நண்பர் ஒருவர் கைது செய்யப்பட்டனர். பின்னர், சிறிது நேரத்தில் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். அவர்கள் மீது பிணையில் வெளிவரக்கூடிய வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர்கள் மீது ஆள் கடத்தல் வழக்குப்பதிவு செய்திருந்தால் அவர்கள் பிணையில் வெளியே வந்திருக்க முடியாது என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், 'இந்த விவகாரத்தில் காவல்துறையினர் சரியான முறையில் செயல்பட்டுவருகிறது. இந்த விவகாரத்தை ஊடகங்கள் பெரிதுபடுத்த வேண்டாம்' என்று தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தையடுத்து, ஹரியானா மாநிலத் தலைவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் அர்த்தமற்றவை என்று பா.ஜ.க தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close