Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருநங்கைகளுக்குத் தனிக் கழிவறை: உதவிக்கரம் நீட்டிய கொல்கத்தா இளைஞர்!

திருநங்கை

திருநங்கைகளை சக மனிதராகப் பார்க்க வேண்டிய அவசியத்தை இன்றைய சமூகம் மெள்ள உணரத் தொடங்கியுள்ளது. அதன் முதல்படி வெவ்வேறு கேலிப் பெயர்களால் அழைத்துக் கிண்டல் செய்யும் தன்மையை மாற்றும் விதத்தில் 'திருநங்கை' எனும் மதிப்புமிகு சொல்லால் அழைக்கப்படுகின்றனர். தங்களுக்கான கல்வியைப் பெறுவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். படித்த கல்விக்கான வேலைகளைப் பெறுவதில் இருக்கும் தடைகளைத் தகர்த்து, தன் இருப்பை நிறுவிவருகின்றனர். காவல்துறை தொடங்கி கல்வித்துறை வரை அனைத்துத் துறைகளில் தடம் பதித்து வருகின்றனர். ஆனபோதும் அவர்களுக்கான பிரச்னைகளில் சிறுபகுதி மட்டுமே கலையப்பட்டிருக்கிறது. 

திருநங்கை

திருநங்கைகள் சந்திக்கும் சிக்கல்களில் பிரதானமானது கழிவறை தொடர்பானது. பயணங்களில், பொது இடங்களில், வணிக வளாகங்களில் என எங்குமே திருநங்கைகளுக்கான தனிக் கழிவறையைப் பார்க்க முடிவதில்லை. இதற்கு, தன்னால் இயன்ற தீர்வாக மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தா மாநகரைச் சேர்ந்த இளைஞர் ஷோபன் முகர்ஜி முயற்சி எடுத்திருக்கிறார். கொல்கத்தாவின் பன்ஸ்ட்ரோனி (Bansdroni) பகுதியின் வார்டு கவுன்சிலரிடம் திருநங்கைகளுக்கான தனிக் கழிவறை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து வலியுறுத்தியும் வந்ததால் தற்போது திருநங்கைகளுக்கான கழிவறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றனர். திருநங்கைகளுக்குப் பொதுச்சமூகத்திலிருந்து எழுந்திருக்கும் ஆதரவு குரலுக்கு வாழ்த்துகளைச் சொல்வோம்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close