Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பா.ஜ.க-வுக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள்... செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில், பா.ஜ.க-வுக்கு வாக்களித்ததாகக் கூறிய காங்கிரஸ் எம்எல்ஏ-க்களின் வாக்குகள் செல்லாதவை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம்

குஜராத் மாநிலத்திலிருந்து மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடம் காலியாக இருந்ததால், அந்த இடங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரான அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிட்டனர்.  ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க-வில் இணைந்தனர். இதனால் அந்தக் கட்சியின் பலம் குறைந்தது. மேலும், பல உறுப்பினர்கள் கட்சி மாற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியானதையடுத்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மீதம் இருக்கும் உறுப்பினர்கள், கர்நாடக மாநிலத்தில் இருக்கும் ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கவைக்கப்பட்டனர்.


அமித் ஷா மற்றும் ஸ்மிருதி இரானி வெற்றி உறுதியாகிய நிலையில், அங்கு மூன்றாவது வேட்பாளராக காங்கிரஸ் கட்சியிலிருந்து பா.ஜ.க-வில் இணைந்த பல்வந்த்சிங் ராஜ்புட்டுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. மூன்றாவது வேட்பாளர் வெற்றிபெற, காங்கிரஸ் உறுப்பினர்களின் ஆதரவு தேவை. எனவே, எம்எல்ஏ-க்கள் அணி மாறி வாக்களித்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் அவர்கள் விடுதியில் தங்கவைக்கப்பட்டனர்.


இந்நிலையில், நேற்று நடைபெற்ற குஜராத் மாநிலங்களவை தேர்தலில் பா.ஜ.க வேட்பாளருக்கு வாக்களித்ததாக, காங்கிரஸைச் சேர்ந்த எம்எல்ஏ-க்கள் போலா பாய் கோஹில் மற்றும் ராகவ் பாய் பட்டேல் ஆகியோர் பகிரங்கமாக தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, "அவர்கள் விதிமுறையை மீறி யாருக்கு வாக்களித்தோம் என்று தெரிவித்துள்ளனர். எனவே, அவர்களின் வாக்கை செல்லாது" என்று அறிவிக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் மனு அளித்தது.


இதையடுத்து, தற்போது அந்த இரண்டு எம்எல்ஏ-க்களின் வாக்குகள் செல்லாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ரகசிய வாக்கெடுப்பு முறையை மீறி அவர்கள் வாக்களித்த தகவலை வெளியில் கூறியதால் இந்த நடவடிக்கை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close