Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாடாளுமன்றத்துக்குள் நுழைகிறார் அமித் ஷா..! நிறைவேறுமா பா.ஜ.க-வின் திட்டம்?

குஜராத் மாநிலத்திலிருந்து மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடம் காலியாக இருந்ததால், அந்த இடங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரான அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இரானி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அதேபோல, காங்கிரஸ் சார்பில் அகமது பட்டேல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அமித் ஷா


இந்நிலையில், மாநிலங்களவைத் தேர்தல் நேற்று நடந்தது. இதில், இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-வுக்கு வாக்களித்ததாகத் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்களின் வாக்கு செல்லாதவை என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து, வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்குகள் எண்ணப்பட்டு, அகமது பட்டேல் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.


அதேபோல, அமித் ஷா மற்றும் ஸ்மிர்தி இரானி ஆகியோரும் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் காங்கிரஸில் இருந்து பா.ஜ.க-வுக்குத் தாவிய ராஜ்புட் தோல்வியடைந்துள்ளார். இதையடுத்து, அமித் ஷாவுக்கு வாழ்த்துகள் குவிந்துவருகின்றன. மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது, 10 துறைகளைத் தன் கைவசம் வைத்திருந்து, மோடிக்கு அடுத்த நிலையில் இருந்தவர் அமித் ஷா.


பின்னர், பா.ஜ.க-வின் தேசியத் தலைவராகி, உத்தரப்பிரதேசத் தேர்தல் உள்பட பல்வேறு அசைமென்ட்களை வெற்றிகரமாக முடித்துள்ளார் அமித் ஷா.  இந்நிலையில், நாடாளுமன்றத்தில் அவரது வருகை பா.ஜ.க-வுக்கு மேலும் வலுசேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பா.ஜ.க-வை வலுப்படுத்தும் ஒரு முயற்சியாகத்தான், அமித் ஷாவின் நாடாளுமன்ற என்ட்ரி என்கின்றனர் விஷயம் தெரிந்தவர்கள். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close