Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'வறுமை, ஊழல், தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைவோம்'- பிரதமர் மோடி அழைப்பு

'நாட்டில் வறுமை, ஊழல் மற்றும் தீவிரவாதத்தை ஒழிக்க அனைவரும்  ஒன்றிணைய வேண்டும்' என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். 

 


'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின் 75-வது ஆண்டு நினைவு தினமான இன்று, மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ''வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின் 75-வது ஆண்டு தினத்தில், அந்த  இயக்கத்தில் பங்கெடுத்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் அனைவரையும் நாம் நினைவுகூர வேண்டும் என்று தெரிவித்தார்.

நாடு விடுதலை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மகாத்மா காந்தி தலைமையில் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்ததாக அவர் குறிப்பிட்டார். காலனி ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், வெள்ளையனே வெளியேறு இயக்கம் 1942-ம் ஆண்டு தொடங்கப்பட்டதாகக் கூறிய அவர், இன்றைய சூழலில் நாம் எதிர்க்கொள்ளும் பிரச்னைகள் மாறுபட்டவை என்று கூறினார். வறுமை, ஊழல் மற்றும் தீவிரவாதம், சாதியவாதம் ஆகியவை இல்லாத, நாம் கனவுகாணும் புதிய இந்தியாவை 2022-ம் ஆண்டுக்குள் உருவாக்க உறுதியேற்போம்'' என்று நாட்டு மக்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close