Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'நாட்டில் முஸ்லிம்கள் மத்தியில் அமைதியின்மை': ஹமீது அன்சாரி வேதனை

இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் அமைதியின்மை நிலவுவதாக ஹமீது அன்சாரி கூறியுள்ளார்.

ஹமீது அன்சாரி


கடந்த வாரம் நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், பா.ஜ.க வேட்பாளர் வெங்கைய நாயுடு வெற்றிபெற்றார். இதையடுத்து, நாளை அவர் குடியரசு துணைத் தலைவராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில், தற்போது குடியரசு துணைத் தலைவராக உள்ள ஹமீது அன்சாரி, இன்று ஓய்வுபெறுகிறார்.


இதனிடையே, ராஜ்ய சபா டி.வி-க்கு ஹமீது அன்சாரி அளித்துள்ள பேட்டியில், "இந்தியாவில், முஸ்லிம்கள் மத்தியில் அமைதியின்மை நிலவிவருகிறது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த நிலைதான். குறிப்பாக, தங்களுக்கு இங்கு பாதுகாப்பில்லை என்று முஸ்லிம்கள் மத்தியில் ஒரு எண்ணம் உருவாகியுள்ளது.


இந்தியா பல நூறு ஆண்டுகளாகவே பன்முகத்தன்மைகொண்ட ஒரு சமூகமாக இருந்துவருகிறது. தற்போதைய சூழலில், அனைவருடனும் ஒற்றுமையாக வாழும் தன்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. காஷ்மீர் பிரச்னையில், அரசியல் ரீதியாகத்தான் தீர்வு காண வேண்டும். சகிப்புத்தன்மைகுறித்து பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களிடம் எனது கருத்துகளைத் தெரிவித்துள்ளேன்" என்றார்.


மாட்டிறைச்சித் தடை, இந்துத்வா பிரச்னை, சிறுபான்மையினர் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில், குடியரசு துணைத் தலைவரின் இந்தக் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close