Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் பாபா ராம்தேவ்!

யோகா குரு பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனம் பிரமாண்ட வளர்ச்சியைப் பெற்று வருகிறது. பதஞ்சலி பொருள்களுக்கு மக்களிடம் நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்துவருகிறது. இதனிடையே, பாபா ராம்தேவ் பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியில் காலை யோகா நிகழ்ச்சி ஒன்றை செய்துவருகிறார். தமிழகத்தில், பதஞ்சலியின் மார்க்கெட்டை வலுப்படுதத்தான் இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டது.

பாபா ராம்தேவ்

அதேபோல, பதஞ்சலி நிறுவனத்தை  ஃபேஸ்புக் மற்றும் கூகுளில் விளம்பரம் கொடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. மேலும்,  1,000 கோடி ரூபாய் செலவில் மெகா ப்ளான் ஒன்றை பாபா ராம்தேவ் தீட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இத்தனை பரபரப்புகளுக்கும் மத்தியில், பாபா ராம்தேவ் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்க உள்ளார்.  'Yeh Hai India' என்ற படத்தை ஆதரித்து, பிரபலப்படுத்த உள்ள பாபா ராம்தாவ், படத்தின் ஒரு பாடலிலும் தலைகாட்டுகிறாராம்.

"உலகத்துக்கே தலைமை தாங்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. அதை இந்தப் படத்தில் அழகாகக் கூறியுள்ளனர். இதனால் நீண்ட யோசனைக்குப் பிறகு இந்தப் படத்துக்கு ஆதரவளிப்பது என்று முடிவெடுத்தேன். நான் மட்டுமல்ல... ஒவ்வொரு இந்தியருமே இதுபோன்ற படங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்" என்று பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close