Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இளம் பெண்ணைப் பின்தொடர்ந்த விவகாரம்..! பா.ஜ.க தலைவர் மகன் கைது

ஹரியானா மாநிலத்தில், இளம் பெண்ணைப் பின்தொடர்ந்த விவகாரத்தில், மாநில பா.ஜ.க தலைவர் மகன் விகாஷ் பராலா கைதுசெய்யப்பட்டுள்ளார். 


ஹரியானா மாநில அரசு உயரதிகாரியின் மகள், வார்னிகா குன்டு. அவர், அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில், ஆகஸ்ட் 4-ம் தேதி இரவு காரில் வந்த ஒருவர் தன்னை வழிமறித்ததாகவும், தன்னுடைய காரின் கதவை அவர் திறக்க முயன்றார் என்றும், நல்லவேளையாக நான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்படவில்லை' என்றும் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு மிகவும் வைரலானது. இந்த விவகாரம் தொடர்பாக, ஆகஸ்ட் 4-ம் தேதி அன்று இரவே, சுபாஷ் பராலாவின் மகன் விகாஷ் பராலா மற்றும் அவரின் நண்பர் ஒருவர் கைதுசெய்யப்பட்டனர்.

பின்னர், சிறிது நேரத்தில் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். அவர்கள்மீது பிணையில் வெளிவரக்கூடிய வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர்கள்மீது ஆள் கடத்தல் வழக்குப்பதிவு செய்திருந்தால், அவர்கள் பிணையில் வெளியே வந்திருக்க முடியாது என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரம், ஹரியானாவில் புயலைக் கிளப்பியது. விகாஷ் பராலாவுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், காவல்துறையினர் நேற்று இரவு விகாஷ் பராலாவை கைதுசெய்தனர். அவர்மீது, ஆள் கடத்தல் பிரிவின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 4-ம் தேதி விகாஷ் கைதுசெய்யப்படும்போது, அவர் குடி போதையில் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close