Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் இல்லாமல் வாகனக் காப்பீட்டைப் புதுப்பிக்க முடியாது!

உரிய மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கான காப்பீட்டைப் புதுப்பிக்கக் கூடாது என்று காப்பீட்டு நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

  

காற்று மாசுபாட்டைக் குறைப்பது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி மதன்.பி.லோகூர் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் வாகனங்கள் சாலையை ஆக்கிரமிப்பதைத் தடுத்து நிறுத்த இந்த உத்தரவை அனைத்துக் காப்பீட்டு நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், தேசிய அளவில் மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ்கள் வழங்கும் நடைமுறையைக் கண்காணிக்க இணையதளம் ஒன்றை உருவாக்கவும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகத்துக்கும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். சுற்றுச்சூழல் மாசுக்கட்டுப்பாட்டு ஆணையம் அளித்த பரிந்துரைகளின்படி உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. பல்வேறு மாசுபாடுகள் குறித்து சூழலியல் ஆர்வலர் எம்.சி.மேத்தா என்பவர் கடந்த 1985-ம் ஆண்டில் தொடர்ந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் இவ்வாறு உத்தரவிட்டனர். 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close