Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வங்கிகளுக்குத் தொடர் விடுமுறை... தவிப்பைத் தவிர்க்கலாமே!

நாளை முதல் தொடர்ந்தாற்போல் வங்கிகளுக்கு நான்கு நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் மக்கள் விடுமுறைக்காலத் தவிப்பைத் தவிர்க்க இன்றே வங்கிப் பரிவர்த்தனைகளை முடித்துக்கொள்ளலாம் என வங்கிகளின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்கிகள்


வங்கிகளுக்கு எப்போதும் இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, நாளை இரண்டாவது சனிக்கிழமை என்பதால் நாளையும் ஞாயிற்றுக்கிழமையும் வார விடுமுறை தினங்கள். அதைத்தொடர்ந்து திங்கள்கிழமை கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுவதால் வங்கிகளுக்கு அன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை சுதந்திர தினம் என்பதால் அன்றும் அரசு விடுமுறை தினமாகும்.

இதனால், அனைத்து வங்கிகளுக்கும் நான்கு நாள்கள் தொடர்ந்து அரசு விடுமுறை இருப்பதால் அந்நாள்களில் பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ள முடியாது. மக்கள் இந்நாள்களில் ஏற்படும் பணத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க வங்கிகளில் நேரடியாக மேற்கொள்ளும் அனைத்து பரிவர்த்தனைகளையும் இன்றே முடித்துக்கொள்ளலாம். ஏ.டி.எம்-களிலும் பணத்தட்டுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் முன்னரே பணத்தை கைவசம் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close