Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நிஹலானி நீக்கம்... கௌதமி உறுப்பினர்... தணிக்கை வாரியத்தில் அடுத்தடுத்த அதிரடி!

மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலைவர் பதவியிலிருந்து பஹலாஜ் நிஹலானி நீக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராக பிரசூன் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

நிஹலானி


கடந்த 2015-ம் ஆண்டு முதல் மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலைவராக இருந்து வந்தவர், பிரபல தயாரிப்பாளர் பஹலாஜ் நிஹலானி. இவர் தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன. அண்மையில் மதுர் பண்டார்கர் இயக்கிய, 'இந்து சர்க்கார்' என்ற படத்தில் பல்வேறு காட்சிகளை நீக்க, தணிக்கை வாரியம் உத்தரவிட்டிருந்தது.


இந்து சர்க்கார், எமர்ஜென்சி காலகட்டத்தை குறித்து எடுக்கப்பட்ட படம்.  இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை எழுப்பியது. உச்சகட்டமாக, நிஹலானிக்கு எதிராக தணிக்கை வாரிய உறுப்பினர்களே குற்றம் சாட்டினர். இதையடுத்து, அவரைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

கௌதமி


மேலும், புதிய தலைவராக பிரசூன் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தேசிய விருது பெற்ற பாலிவுட் பாடலாசிரியர் ஆவார். அதேபோல, தணிக்கை வாரியத்துக்குப் புதிய உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, நடிகைகள் கௌதமி மற்றும் வித்யா பாலன் ஆகியோர் தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close