Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வந்தே மாதரம்னா என்னங்கய்யா?: ஒரு வரி கூட பாடாமல் எஸ்கேப் ஆன பா.ஜ.க அமைச்சர்!

தமிழகக் கல்வி நிலையங்களில் வந்தே மாதரம் கட்டாயம் பாட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதுமே பெரும்பாலான மாநிலங்களில் வந்தே மாதரம் பாடுவது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. மும்பை மாநகராட்சி முழுவதுமே வந்தே மாதரம் பாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 பல்தேவ் சிங் ஆலுக்


அதேபோல உத்தரப்பிரதேசத்திலும், சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என்று அங்குள்ள இஸ்லாமியப் பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ள ஆதித்யநாத் அரசு, அப்போது வந்தே மாதரமும் பாட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும், அந்த நிகழ்ச்சியை வீடியோ பிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது


இப்படி வந்தே மாதரத்தைக் கட்டாயமாக்க அடம் பிடிக்கும் பா.ஜ.க-வின் அமைச்சர் ஒருவரே, வந்தே மாதரம் பாடாமல் மழுப்பிய சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் சிறுபான்மை துறை நலன் அமைச்சராக இருப்பவர் பல்தேவ் சிங் ஆலுக். இவர் அண்மையில் 'இந்தியா டுடே' தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.


வந்தே மாதரம் கட்டாயமாக்கப்படுவது குறித்த அந்த நிகழ்ச்சியில் ஒரு கட்டத்தில், நீங்கள் வந்தே மாதரம் பாடுங்கள் என்று அமைச்சரிடம் கூறியுள்ளனர். ஆனால், அமைச்சரோ வந்தே மாதரத்திலிருந்து ஒரு வரி கூட பாடவில்லையாம். மாறாக, "வந்தே மாதரத்தை நாட்டில் உள்ள அனைவருமே பாட வேண்டும்" என்று பேச்சை மாற்றி எஸ்கேப் ஆகியுள்ளார். 

News and Photo Source : India Today

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close