Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

63 குழந்தைகள் பலி: உ.பி. முதல்வர் ஆதித்யநாத்தை விளாசும் ஜவாஹிருல்லா

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. அந்த மருத்துவமனையில் கடந்த இரு தினங்களாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 30 குழந்தைகள் உயிரிழந்தனர். ஆக்ஸிஜன் வழங்கியதை நிறுத்தியதால்தான் குழந்தைகள் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஜவாஹிருல்லா


இந்நிலையில், ’இச்சம்பவம் முற்றிலும் பா.ஜ.க அரசின் குற்றவியல் ரீதியான அலட்சியத்தால் ஏற்பட்டது’ என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் தொகுதியான கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி. அரசு மருத்துவமனையில் நிர்வாக சீர்கேட்டின் காரணமாக 63 பச்சிளம் குழந்தைகள் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு மருத்துவமனையில் பிராண வாயு விநியோகிக்கும் நிறுவனத்துக்கு ரூ.69 லட்சத்தை அரசு வழங்காமல் நிலுவை வைத்ததால் குறிப்பிட்ட நிறுவனம் பிராண வாயு விநியோகம் செய்யாததால் குழந்தைகள் பலியாகி உள்ளன. பெரும் எண்ணிக்கையில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்ததற்கு ஆதித்யநாத் அரசின் குற்றவியல் ரீதியான அலட்சியப் போக்கே காரணமாக இருக்கின்றது. பசுவைக் காப்பாற்றுவதில் காட்டும் அக்கறையில் ஒரு விழுக்காட்டைக் கூட ஆதித்யநாத் அரசுக் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கு காட்டவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. மனிதஉயிர்களை மதிக்காத ஆதித்யநாத் அரசை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது’ என்று கூறியுள்ளார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close