Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராணுவத் தலைமையகம் மீது தீவிரவாதத் தாக்குதல்: ராணுவ வீரர் படுகாயம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ராணுவத் தலைமையகத்தின் மீது இன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

ராணுவம் மீது தாக்குதல்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் ராணுவத் தலைமையகம் உள்ளது. இந்த மையம் ராணுவத்தின் 41-வது பிரிவு தேசிய ரைஃபிள்ஸ் படையினரின் தலைமைச் செயலகமாக செயல்பட்டு வருகிறது. இந்தத் தலைமையகத்தின் மீதே தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.


தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சுடுதல் தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இத்தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து ராணுவத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தொடர்புடையவர்களைத் தேடும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.


இதைத்தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பூஞ்ச் மாவட்ட எல்லையோரப் பகுதியிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தீவிரவாதிகள் நடத்திய இந்தத் தாக்குதலில் பொதுமக்களுள் ஒரு பெண் பலியாகியுள்ளார். இதனால் எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்தே காணப்படுகிறது. ராணுவத்தினர் பாதுகாப்பு வளையத்தை அதிகரித்துள்ளனர்.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close