Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெள்ளத்தில் சிக்கிய அசாம்: 11 லட்சம் மக்கள் பாதிப்பு!

அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் 11 லட்சம் மக்கள் சிக்கியுள்ளனர்.

அசாம்


அசாம் மாநிலத்தில் பெய்த பேய் மழையால், அங்கு கடந்த சில நாள்களாக கடுமையான வெள்ளம் நிலவுகிறது. குறிப்பாக, அங்குள்ள 32 மாவட்டங்களில் 19 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போதுவரை வெள்ளத்தில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 11 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. கோடிக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வெள்ளத்தில் நாசமடைந்துள்ளன. 14 மாவட்டங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.


வெள்ளத்தால் அம்மாநிலத்தில் பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்பட்டவில்லை. மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சர்பானந்த சோனுவால் பார்வையிட்டார்.  அசாமில் கடந்த ஜூலை மாதம் பெய்த தொடர் மழையாலும் வெள்ளம் ஏற்பட்டது. அதன் பாதிப்பு அடங்குவதற்குள், தற்போது மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close