Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’பதவி விலகுகிறேன்’: லலித் மோடி அறிவிப்பு!

நாக்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவராகப் பணியாற்றும் லலித் மோடி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

லலித் மோடி

நாக்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவராகப் பணியாற்றி வந்தவர் லலித் மோடி. சில ஆண்டுகளுக்கு முன்னர் ஐ.பி.எல். டி.20 கிரிக்கெட் போட்டியின்போது, மேட்ச் பிக்ஸிங், சூதாட்டத்தில் சுமார் ரூ.425 கோடிக்கு ஊழல் நடந்ததாகவும், இதில் லலித் மோடிக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 2010 ஆம் ஆண்டு திடீரென இங்கிலாந்து  நாட்டிற்குச் சென்றார் லலித் மோடி. அதன்பிறகு அவர் இந்தியா திரும்ப மறுத்து விட்டார். அதன்பிறகு தேடப்படும் குற்றவாளியாக லலித் மோடியை அமலாக்கத் துறையால் அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் நாக்பூர் கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவியிலிருந்து தான் விலகுவதாக லலித் மோடி அறிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் சங்கத்தில் லலித் மோடி உறுப்பினராய் இருப்பதினாலே அம்மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு பிசிசிஐ தடை விதித்திருந்தது. இதனால் தனி ஒரு நபருக்காக கிரிக்கெட் சங்கம் பாதிக்கக்கூடாது என்பதற்காக தன் பதவியை ராஜினாமா செய்வதாக லலித் மோடி அறிவித்துள்ளார். இதன் மூலம் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்துடன் அவருக்கிருந்த தொடர்பு முற்று பெற்றது.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close