Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோரக்பூரில் ரூ.85 கோடியில் நோய்களை கண்டறியும் ஆய்வு மையம்!

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் ரூ.85 கோடியில் குழந்தைகளுக்காக நோய்களைக் கண்டறிய ஆய்வு மையம் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். 

gorakphur
 

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. அந்த மருத்துவமனையில் கடந்த இரு தினங்களாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 30 குழந்தைகள் உயிரிழந்தனர். ஆக்ஸிஜன் வழங்கியதை நிறுத்தியதால்தான் குழந்தைகள் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த மருத்துவக் கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 

இதனிடையே, குழந்தைகள் உயிரிழந்த மருத்துவமனையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா மற்றும் உத்தரப்பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இன்று கோரக்பூர் மருத்துவமனைக்கு நேரில் வந்து பார்வையிட்டனர். 

இதனைத்தொடர்ந்து இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஜே.பி. நட்டா கோரக்பூர் பகுதியில் ரூ.85 கோடியில் மண்டல  ஆராய்ச்சி மையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close