Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோரக்பூர் அதிர்ச்சி: குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர் நீக்கம்!

உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் அரசு மருத்துவமனையில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் விநியோகம் செய்யும், நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்துள்ள உ.பி அரசு, ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் உயிரிழந்ததை மறுத்து வருகிறது.

காஃபீல் கான்


இந்நிலையில், அங்கு குழந்தைகள் நலப்பிரிவு நோடல் ஆஃபிஸர், மருத்துவர் காஃபீல் கான் எண்ணற்ற குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றினார். தனது நண்பரின் க்ளீனிக்கில் இருந்து மூன்று ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மருத்துவமனைக்கு வரவழைத்த கான், வெளியில் இருந்தும் ரூ. 10,000 கொடுத்து 9 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கியுள்ளார்.


இதன் மூலம் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் மருத்துவர் காஃபீல், நோடல் ஆஃபிஸர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக பூப்பேந்திர ஷர்மா என்பவர் அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், காஃபீல் நீக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றி மக்கள் மனதில் இடம் பிடித்த மருத்துவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close