Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’வாட் வரியைக் குறையுங்கள்’ - மாநில முதல்வர்களுக்கு அருண் ஜெட்லி கடிதம்

பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு மீதான வாட் வரியைக் குறைக்கக் கோரி, மாநில முதலமைச்சர்களுக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கோரிக்கை விடுத்துள்ளார்.

அருண் ஜெட்லி

 
சுதந்திரத்துக்குப் பிறகான மிகப்பெரிய வரிச் சீர்திருத்தமாகக் கூறப்படும் ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை, கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அமலானது. ஜி.எஸ்.டி வரி விதிப்பிலிருந்து பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு உள்ளிட்டவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பெட்ரோலியம் உள்ளிட்ட கச்சா எண்ணெய்ப் பொருள்களுக்கான உள்ளீடு செலவுகள் அதிகரிப்பதாக உற்பத்தித்துறையைச் சேர்ந்தவர்கள் கவலை தெரிவித்ததால், மாநில முதலமைச்சர்களுக்கு விற்பனை வரி அல்லது வாட் வரியைக் குறைக்க வலியுறுத்திக் கடிதம் எழுதியுள்ளார். ஜூலை 1-ம் தேதிக்குப் பின்னர் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களுக்கு ஜி.எஸ்.டி-யின் கீழ் வரி விதிக்கப்படும் நிலையில், உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருள்களுக்கு வாட் வரி விதிக்கப்பட்டுவருகிறது. இதனால், வரி விகிதம் அதிகரிப்பதாகக் கருதப்படுகிறது. அதைத் தவிர்க்கவே, 'வரிச்சுமையைக் குறைக்க வேண்டும்' என்று கூறி, மாநில முதலமைச்சர்களுக்கு நிதியமைச்சர் அருண் ஜெட்லி கடிதம் எழுதியுள்ளார்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close