Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நன்கொடை பெற்றதில் பாரதிய ஜனதா முதலிடம்!

நான்கு ஆண்டுகளில் (2012-16) கார்ப்பரேட் நிறுவனங்களிலிருந்து 705.81 கோடி ரூபாயை பாரதிய ஜனதா கட்சி நன்கொடையாகப் பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கு 2, 987 கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதி அளித்துள்ளன. காங்கிரஸ் கட்சி 198.16 கோடி பெற்றிருக்கிறது.

பெட்டியுடன் அருண் ஜேட்லி

கடந்த 3 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 167 நிறுவனங்கள்தான் நன்கொடை கொடுத்துள்ளன. தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 50.73 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது. இந்த நான்கு ஆண்டுகளில் நாட்டின் ஐந்து தேசியக் கட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து மொத்தம் ரூ.1,070 கோடி நன்கொடையாகப் பெற்றுள்ளன. குறைந்தபட்சமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 சதவிகிதமும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 17 சதவிகித நன்கொடையும் கிடைத்துள்ளது. 

2012-13 முதல் 2015-16-ஆம் நிதியாண்டு வரை தேசிய கட்சிகள் சமர்ப்பித்த நன்கொடை விவரங்களை ஆய்வு செய்து அசோஷியேசன் பார் டெமாக்ரடிக் ரீஃபார்ம்ஸ் என்ற அமைப்பு இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து ரூ.20 ஆயிரத்துக்கு மேல் பெறும் நன்கொடை விவரங்களை ஒவ்வோர் நிதியாண்டிலும் தேர்தல் கமிஷனிடம் கட்சிகள் சமர்ப்பிக்க வேண்டும். நிதி வழங்கிய நிறுவனம், வழங்கப்பட்ட முறை, பான் விவரங்கள் முறையாகத் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். 

மக்களவை, மாநிலங்களைவை இரண்டிலுமே அதிக உறுப்பினர்களுடன் தனி ஆவர்த்தனம் செய்யும் பாரதிய ஜனதா கட்சி நன்கொடை பெறுவதிலும் முதலிடத்தில் இருப்பதில் வியப்பதற்கு ஏதுமில்லை! 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close