Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரூ.25,000 கோடி இழப்பை சந்தித்த இன்ஃபோசிஸ்! - விஷால் சிக்கா பதவி விலகல் சர்ச்சை

உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸின் தலைமைச் செயலதிகாரி மற்றும் முதன்மைச் செயலதிகாரியான விஷால் சிக்கா, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்

விஷால் சிக்கா


இன்ஃபோசிஸ் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தன்மீது வைக்கும் தனிப்பட்ட தாக்குதல்களால் பதவியை ராஜினாமா செய்ததாக விஷால் சிக்கா கூறியிருக்கிறார். அதனால் சுதந்திரமாக சிந்தித்து தம்மால் செயல்பட முடியவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சர்வதேச தலைவராகப் பதவி வகித்து வந்த அனிர்பன் தேய், துணைத் தலைவர் ரிதிகா சூரி ஆகியோர் சமீபத்தில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தனர். இந்தநிலையில், தலைமை செயலதிகாரி மற்றும் மேலாண் இயக்குநர் பதவி வகித்த விஷால் சிக்கா விலகியிருப்பது இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. விஷாலின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ள இன்ஃபோசிஸ் நிர்வாகக் குழு, அவர் வகித்து வந்த பதவிகளை தற்காலிகமாக யு.பி.பிரவின் ராவ் வகிப்பார் என்றும் அறிவித்துள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியாகக் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ல் பதவியேற்றார். அன்றைய தினம் முதல் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் 22 சதவிகிதம் அதிகரித்தது.  

இதையடுத்து பங்குச்சந்தையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன. கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்ஃபோசிஸ் நிறுவன ஒரு பங்கின் மதிப்பு 13 சதவிகித அளவுக்குக் குறைந்து ஒரு கட்டத்தில் ரூ.884 வரை சரிந்தது. மும்பை பங்குச் சந்தை முடிவில், அந்த நிறுவனத்தின் பங்கு வர்த்தகம் 9.6 சதவிகிதம் அளவுக்குக் குறைந்தது. இதன்மூலம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை முதலீட்டு மதிப்பில் ரூ.24,839 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close