Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உத்தரப்பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து: பலி எண்ணிக்கை 23ஆக அதிகரிப்பு..! 40 பேர் காயம்

உத்தரப்பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டத்தில் 23 பேர் பலியாகினர். 40-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். 

உத்தரப்பிரதேசம் ரயில் விபத்து

உத்தரப்பிரதேசத்தில் பூரி - ஹரித்வார்- கலிங்கா உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில், முசாபர் நகர் அருகே தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. ரயிலின் ஐந்து பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. சம்பவ இடத்துக்கு தேசிய பேரிடர் மேலாண்மை வாரியப் படைகள், மீட்புப் பணிகளுக்காக விரைந்துள்ளன.  மாலை 5.50 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதுகுறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, "மூத்த அதிகாரிகளை சம்பவ இடத்துக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளேன். மருத்துவக் குழுக்களும் விபத்து நடந்த இடத்துக்குச் சென்றுள்ளனர். மிக வேகமாக மீட்புப் பணிகள் நடைபெறும்" என்று ட்விட்டரில் கூறியுள்ளார்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு ரயில்வே உயரதிகாரிகள் சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து இந்திய ரயில்வேயின் உயரதிகாரி அனில் சக்சேனா, "காயமடைந்தவர்கள்குறித்து விவரங்கள் தெரியவில்லை. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளோம்" என்று கூறியுள்ளார்.

சற்று நேரத்துக்கு முன்னர் உத்தரப்பிரதேச காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் படி, '23 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close