Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உத்தரப்பிரதேச ரயில் விபத்து: கமல்ஹாசன் இரங்கல்

உத்தரப்பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டத்தில் 23 பேர் பலியாகினர். 40-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த விபத்துக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன்

உத்தரப்பிரதேசத்தில் பூரி - ஹரித்வார்- கலிங்கா உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில், முசாபர் நகர் அருகே தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. ரயிலின் ஐந்து பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. சம்பவ இடத்துக்கு தேசிய பேரிடர் மேலாண்மை வாரியப் படைகள், மீட்புப் பணிகளுக்காக விரைந்துள்ளன. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு ரயில்வே உயரதிகாரிகள் சென்று பார்வையிட்டனர். இந்திய ரயில்வேயின் உயரதிகாரி அனில் சக்சேனாவும் விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.

முன்னர், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்திருந்தார். இந்நிலையில், 'உத்தரப்பிரதேச  ரயில் விபத்துப் பற்றி கேள்விப்பட்டு அதிர்ச்சிக்குள்ளானேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்' என்று தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close