Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெடித்துச் சிதறிய ரெட்மி! - காரணம் சொல்லும் சியோமி 

ஆந்திராவில் ’ரெட்மி நோட் 4’ வாடிக்கையாளரின் பாக்கெட்டில் வெடித்துச் சிதறியது குறித்து சியோமி நிறுவனம் அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.

redmi explosion
 

கடந்த வாரம் ஆந்திர மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது அவர் பாக்கெட்டில் இருந்த ரெட்மி நோட் 4  வெடித்துச் சிதறியது. போன் வெடித்ததில் ஆடையில் தீப்பற்றி அந்த நபருக்கு காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்துள்ளனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம் இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் ரெட்மி ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சற்று அதிகம். சாம்சங் நோட் 7, ஐபோன் உள்ளிட்டவை வெடித்துச் சிதறி மக்களிடையே பீதியை கிளப்பிய நிலையில், பலரின் அபிமான ஸ்மார்ட் போன் ரெட்மியும் வெடித்துச் சிதறி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுகுறித்து சியோமி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ‘வெடித்து சிதறிய ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அந்த ஆய்வு செய்ததில், போனிற்கு வெளிப்புறம் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் போனின்  கவர் மற்றும் பேட்டரி சிதைந்து, போனின் ஸ்கிரீன் உடைந்துள்ளது. போனில் மேலும் சில ஆய்வுகள் நடத்திய பின்னரே வெடித்துச் சிதறியதற்கான காரணம் தெரியவரும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close