Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோசாலையில் பசுக்கள் உயிரிழப்பு..! பா.ஜ.க தலைவர் கைது

சத்திஸ்கர் மாநிலத்தில் கோசாலையில் 200-க்கும் மேற்பட்ட பசுக்கள் பசியால் இறந்ததால் பா.ஜ.க தலைவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


சத்திஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க தலைவர் ஹரிஷ்வர்மாவுக்குச் சொந்தமாக கோசாலை செயல்பட்டுவருகிறது. அந்தக் கோசாலையில் பசுக்கள் பசியாலும் போதிய வசதியில்லாமலும் தொடர்ச்சியாக இறந்துள்ளன. அதனால் கடந்த சில தினங்களில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட பசுக்கள் இறந்துள்ளது. இறந்த பசுக்கள் அந்த கோசாலை அமைந்துள்ள இடத்திலேயே புதைக்கப்பட்டுள்ளன என்று பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக  ராஜ்ய கவ் சேவா ஆயோக் அமைப்பினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, கோசாலை உரிமையாளர் ஹர்ஷவர்மா கைதுசெய்யப்பட்டார்.

அவர் மீது கால்நடை பாதுகாப்புச் சட்டம் மற்றும் விலங்குகளுக்கு எதிரான கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 50-க்கும் மேற்பட்ட பசுக்கள் உயிருக்குப் போராடிவருகின்றன என்று அங்கு ஆய்வு மருத்துவர் தெரிவித்துள்ளார். மேலும், 200 பசுக்கள் மட்டுமே பராமரிக்கப்படவேண்டிய கோசாலையில் 650-க்கும் மேற்பட்ட பசுக்கள் பராமரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெரிவித்த ஹர்ஷ்வர்மா, 'நிலுவையிலுள்ள 10 லட்ச ரூபாயை அளிக்கக்கோரி அரசுக்கு பலமுறை கடிதம் எழுதியும் பலனில்லை. இதுவரை எந்த நிதி உதவியும் கிடைக்கவில்லை' என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close