Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திரையரங்கில் தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காத காஷ்மீர் மாணவர்கள் கைது!

திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிக்கும்போது அமர்ந்திருப்பது, அதை அவமரியாதைசெய்வது போன்றதாகும். இந்தச் செயல், சட்டப்படி குற்றமாகும். 


'திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும். ஒலிக்கும்போது, திரையரங்கில் உள்ள அனைவரும் எழுந்து நிற்க வேண்டும்' என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்பிறகு, திரையரங்கங்களில் திரைப்படம் தொடங்குவதற்கு முன்பாக தேசிய கீதம் ஒலிக்கப்பட்டுவருகிறது. 

ஹைதராபாத் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில், காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஓமர் பியாஸ் லுனே, முடாபிர் ஷபிர் மற்றும் ஜமீல்  குல் என்ற மூன்று மாணவர்கள் படித்துவந்தனர். கடந்த சனிக்கிழமை அன்று இவர்கள் படம் பார்க்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு தேசிய கீதம் ஒலித்தபோது இந்த மூவரும் எழுந்து நிற்காமல் பேசிக்கொண்டிருந்திருக்கின்றனர்.

இதற்கு அங்கு எதிர்ப்புக் கிளம்பியது. இதையடுத்து, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, மூன்று காஷ்மீர் மாணவர்களும் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள்மீது தேசிய கீதத்தை அவமரியாதைசெய்ததாக வழக்குப் பதியப்பட்டது. கைதுசெய்யப்பட்ட மாணவர்கள், விசாரணைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close