Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போர் பதற்றத்துக்கு மத்தியில் ஒரு லவ்ஸ்! - இந்தியரை மணந்த சீனப் பெண்

காதலுக்கு நாடு, இனம், மொழி  கிடையாது என்பார்கள். இந்தியக் கலாசாரம் பிடித்துப் போய்,  ஐரோப்பியப் பெண்கள் இந்தியர்களை விரும்பி மணமுடிப்பது உண்டு. ஜப்பானியப் பெண்களுக்கும் இந்திய கலாசாரம் மிகவும் பிடித்த ஒன்று. ஏராளமான ஜப்பானிய பெண்களும் ஆண்களும் இந்தியர்களை மணந்துள்ளனர். ஆனால், சீனப் பெண்கள் இந்தியர்களை மணப்பது குறைவு. அந்தக் குறையையும் தீர்த்து வைத்திருக்கிறார் சீனப் பெண் ஒருவர். 

இந்தியரை மணந்த சீனப் பெண்

கேரளாவைச் சேர்ந்த ஜோசப், ரோஸி தம்பதியின் மகன் ஜிபி. இவர் பெங்களூரில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிகிறார். ஆறு வருடங்களுக்கு முன், சீனாவைச் சேர்ந்த இளம் பெண்  யூ ஜூவான் சென் உடன் ஃபேஸ்புக் வாயிலாக பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நட்பு கனிந்து காதலாகியிருக்கிறது. ஜிபி. தன் காதலை பெற்றோரிடம் சொன்னார். 'என்ன சீனப் பெண்ணா' என பெற்றோர் முதலில் அதிர்ச்சியடைந்தனர். 

காதலில் உறுதியாக இருந்த ஜிபி, யூவை தன் பெற்றோரிடம் பேச வைத்துள்ளார். யூ பேசியது, பழகியவிதம் ஜிபியின் பெற்றோருக்கு பிடித்துப் போக, காதலுக்கு பச்சைக் கொடிக் காட்டினர். யூ  ஜூவான் வீட்டில் எந்த எதிர்ப்பும் கிளம்பவில்லை. இந்திய மாப்பிள்ளை என்றதும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தனர். திருமணத்துக்காக ஆகஸ்ட் 17-ம் தேதி யூவின் குடும்பத்தினர் சீனாவில் இருந்து கேரளா வந்தனர். 

கோட்டயத்தில் உள்ள ஆலயத்தில் நேற்று ஜிபி- யூ திருமணம் நடந்தது. மணப்பெண் இந்திய பாரம்பர்ய பட்டுப் புடவையுடன் கழுத்து நிறைய தங்க நகைகளும் அணிந்திருந்தார். திருமணத்தில் கலந்துகொண்ட, உறவினர்களும் நண்பர்களும் மணமக்களை மனதார வாழ்த்திச் சென்றனர். 

எல்லையில் சண்டையிட்டாலும் காதல் இந்திய-சீன மனங்களை இணைத்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close