Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருமண பந்தத்தில் இணையும் மாற்றுப் பாலின காதல் ஜோடி!

கேரளாவைச் சேர்ந்தவர் திருநம்பி ஆரவ் அப்புகுட்டன். 46 வயதான ஆரவ் அப்புகுட்டனின் இயற்பெயர், பிந்து.  சிறுவயதில் இவருடைய உடம்பில் ஆணுக்கான அறிகுறிகள் தோன்றியதையடுத்து ஆணாக மாறிவிட்டார்.

சுகென்யா கிருஷ்ணன்

அதேபோன்று, பெங்களூரைச் சேர்ந்த 22 வயது திருநங்கை சுகென்யா கிருஷ்ணனும் சந்துவாக இருந்து, சுகென்யா கிருஷ்ணனாக மாறியவர். சுகென்யாவின் வீட்டில் இவரை ஒதுக்கிவைத்துவிட, இவரை ஒரு வளர்ப்புத் தந்தை வளர்த்து ஆளாக்கினார். இவர், தனது வளர்ப்புத் தந்தையின் உதவியுடன் ஆப்ரேஷனுக்காக மும்பை சென்றுள்ளார். ஆனால், 18 வயதுக்குப் பிறகுதான் ஆபரேஷன் செய்துகொள்ள முடியும் என  மருத்துவர் கூறியதால், பெங்களூருக்கு வந்து, அங்கு ஒரு தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வந்துள்ளார்.

ஆரவ் அப்புகுட்டன், ஆபரேஷனுக்காக மும்பை செல்ல, அங்குள்ள மருத்துவர் சுகென்யாவைப் பற்றிக் கூறியுள்ளார். உடனே ஆரவ், சுகென்யாவைப் பார்க்க பெங்களூரு சென்றுள்ளார். இருவருக்கிடையே நட்பு  வளரத் தொடங்கி, நாளடைவில் காதலாக மாறி இருக்கிறது.  தற்போது, இருவரும் அவர்களது ஆண்,பெண் உறுப்புகளை ஒருவருக்கொருவர் மாற்றி ஆபிரேஷன் செய்துள்ளனர். அடுத்த மாதம் இந்த இளம் ஜோடிகளுக்கு திருமணமாம்.

Courtesy : Mid-day

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close