Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முத்தலாக் வழக்கு: இன்று தீர்ப்பளிக்கிறது உச்ச நீதிமன்றம்!

இஸ்லாமிய வழக்கத்தில் உள்ள முத்தலாக் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம்

'முத்தலாக்'  என்பது இஸ்லாமியப் பெண்களுக்கு எதிரானது எனப் பலரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இதுவரை, ஏழு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்திவந்தது.

இந்நிலையில், முத்தலாக் தொடர்பான விவாதங்களும் கருத்துகளும் அரசியல் தளங்களில் தொடர்ச்சியாக ஒலித்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் முத்தலாக் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. நீதிபதி கேஹர் முன்னர் அறிவித்தது போலவே, ‘முத்தலாக் என்ற வழக்கம் இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகளுள் ஒன்றானதா’ என்பது குறித்து மட்டுமே இன்று தீர்ப்பளிக்கப்பட உள்ளது.

மேலும், தற்போதைய சூழலில் இஸ்லாமிய சமூகத்தில் வழக்கத்திலிருக்கும் பலதார மணம், நிக்கா ஹாலா போன்றவை குறித்து விசாரணையோ விவாதமோ உச்ச நீதிமன்றத்தில் நடைபெறாது என்றும் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு, உச்ச நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close