Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடையைக்கட்டுகிறது மெக்டொனால்டு: ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்!

உலகின் முன்னணி உணவு வணிக நிறுவனமான மெக்டொனால்டு, வட இந்தியாவில் உள்ள தன்னுடைய 169 கிளைகளையும் மூட உள்ளது.

McDonald's

வட இந்தியாவில், மெக்டொனால்டு நிறுவனம் இன்னும் 15 நாள்களில் தன்னுடைய அத்தனை கிளைகளையும் மூட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மெக்டொனால்டு நிறுவனம், இந்தியாவில் தன் கிளைகளை வழி நடத்த ’கானட் ப்ளாசா ரெஸ்டார்ன்ட்’ உடன் ஒப்பந்தம் செய்திருந்தது. கானட் ப்ளாசா, மெக்டொனால்டுக்கு சரியான இந்தியப் பங்குதாரராக இல்லாத காரணத்தால், தொழில் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது மெக்டொனால்டு. தற்போதைய நிலையில், வட இந்தியாவில் மட்டுமே இந்த வெளியேற்றம் என்றாலும், உணவுப் பிரியர்கள் சந்திக்கவிருக்கும் இழப்பைவிட, மெக்டொனால்டு வட இந்தியக் கிளைகளில் வேலைபார்க்கும் ஊழியர்களின் இழப்பே அதிகம்.

இது குறித்து மெக்டொனால்டு வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையில், ‘சரியான பங்குதாரர் அமையாத காரணத்தால் வட இந்தியக் கிளைகளை மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கானட் ப்ளாசா உடன் ஏற்பட்டுள்ள வேற்றுமைகள் விரைவில் சரி செய்யப்படும். கானட் ப்ளாசா ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்படவில்லை. விரைவில் நிறுவனத்துடன் தொடர்புடைய பங்குதாரர்கள், ஊழியர்கள், நில உரிமையாளர்கள் என அனைவருக்கும் ஏற்பட்ட இழப்புகள் ஈடு செய்யப்படும்’ என்றுள்ளது.

மெக்டொனால்டு, டெல்லியில் மட்டும் தன்னுடைய 43 கிளைகளை, தன்னுடைய பங்குதாரரான ’கானட் ப்ளாசா’ உணவகம் நடத்துவதற்கான உரிமத்தை புதுப்பிக்காத காரணத்தால், மூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close