Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரே நாளில் 9,500 திட்டங்களைத் தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி!

 பிரதமர் மோடி, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது மற்றும் தொடங்கிவைப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக, ஆகஸ்ட் 29-ம் தேதி ராஜஸ்தான் செல்ல இருக்கிறார்.

பிரதமர் மோடி


ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் செல்லும் பிரதமர் மோடி, 9,500-க்கும் மேற்பட்ட சாலைப் பணிகளைத் தொடங்கிவைக்க இருக்கிறார். தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் ஊரகப் பகுதி சாலைகள் என மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்கு அவர்  அடிக்கல் நாட்ட இருக்கிறார். மாநில அரசின் சில திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கிவைக்க இருக்கிறார். இந்தத் திட்டங்களின் மொத்த மதிப்பு 27,000 கோடி ரூபாய் என்று ராஜஸ்தான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில், 3,000 கிலோ மீட்டர் நீளம் கொண்ட 109 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் நிதியுதவியின் கீழ் தொடங்கப்பட இருக்கின்றன. திட்டங்களைத் தொடங்கிவைத்து, உதய்பூரில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார். அவரது உரை, மாநிலத்தின் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய திரைகள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில், மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே மற்றும் மாநில அமைச்சர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.    

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close