Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காசிரங்கா பலி எண்ணிக்கை 369 ஆக உயர்வு!

ஸ்ஸாம் வெள்ளத்தில் காசிரங்கா வனச்சரணாலயத்தில் பலியான விலங்குகளின் எண்ணிக்கை 369 ஆக உயர்ந்துள்ளது. 

காசிரங்கா காண்டாமிருகங்கள்

காசிரங்கா வனச்சரணாலயம் 100-க்கும் மேற்பட்ட காண்டாமிருகங்களின் உறைவிடம். உலகில் வேறு எங்கும் இவ்வளவு எண்ணிக்கையிலான காண்டாமிருகங்கள் வசிக்கவில்லை. சமீபத்தில், அஸ்ஸாமில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் 24 காண்டாமிருகங்கள் தண்ணீரில் மூழகி உயிரிழந்துள்ளன. 12 மணி நேரத்தில் காசிராங்கா வனத்தில் 10 அடி உயரத்துக்கு வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால், காண்டாமிருகங்களைக் காப்பற்ற எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலை.

இதுதவிர, வெள்ளத்தில் சிக்கி 250 மான்கள் பலியாகியுள்ளன. இவற்றின் உடல்கள் ஆங்காங்கே தண்ணீரில் அழுகிக் கிடக்கின்றன. இதனால், உயிருடன் உள்ள மற்ற விலங்குகளுக்கும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இறந்த மிருகங்களின் உடல்களை அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

சுமார் 430 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட காசிரங்கா வனத்தில் 70 சதவிகித பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இந்தியாவில் வங்கப்புலிகள் அதிகம் வசிக்கும் வனமும் இதுதான். 104 வங்கப்புலிகள் இங்கு இருந்தன. அதில், ஒன்று உயிரிழந்துள்ளது. இதுதவிர 4 யானைக்குட்டிகள், 4 காட்டெருமைகள் , 4 காட்டுப்பன்றிகள் உயிரிழந்துள்ளன. காசிரங்காவில் இருந்த 100 காண்டாமிருகங்களில் 24 காண்டாமிருங்கள் இறந்து போனது நாட்டுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய இழப்பாகும். இந்நிலையில், காசிரங்கா வனச்சரணாலயத்தில் இறந்த விலங்குகளின் எண்ணிக்கை 369 ஆக உயர்ந்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close