Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முத்தலாக் தீர்ப்பில் முரண்பட்ட நீதியரசர்கள்

முத்தலாக் விவகாரத்தில் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்துள்ளனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள். ' முத்தலாக் விவகாரத்தில் கருத்து வேறுபாடுகளை மறந்து அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து சட்டமியற்ற உதவ வேண்டும்' எனவும் நீதியரசர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

உச்ச நீதிமன்றம்

 

முத்தலாக்' என்பது இஸ்லாமியப் பெண்களுக்கு எதிரானது எனக் குறிப்பிட்டு, சமூக ஆர்வலர்கள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பாக, ஏழு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இநத வழக்குகளை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில், முத்தலாக் தொடர்பான விவாதங்களும் கருத்துகளும் அரசியல் தளங்களில் தொடர்ச்சியாக ஒலித்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் முத்தலாக் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ளது. தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு, இந்த வழக்கை இன்று விசாரித்தது. 

இந்த வழக்கின் நீதிபதிகள் குழுவில், தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் நீதிபதிகள் நாரிமன், லலித், குரியன், நசீர் ஆகிய நீதிபதிகள் உள்ளனர். இவ்வழக்கின் தீர்ப்பில், ‘முத்தலாக் முறையை ஆறு மாத காலம் நிறுத்தி வைக்கிறோம். முத்தலாக் முறையைத் தடை செய்ய விரும்பினால் நாடாளுமன்றம் சட்டம் இயற்றிக்கொள்ளலாம். மேலும், மத்திய அரசு ஆறு மாத காலத்துக்குள் சட்டம் கொண்டு வந்து முத்தலாக் முறையைத் தடை செய்யலாம். இதற்காகக் கருத்து வேறுபாடுகளை மறந்து அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து சட்டமியற்ற உதவ வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த நீதிபதிகள் குழுவில் நீதிபதிகள் நாரிமன், லலித், குரியன் ஆகியோர், ‘முத்தலாக் முறை சட்டத்துக்குப் புறம்பானது’ என்று தீர்ப்பளித்துள்ளனர். ஆனால், தலைமை நீதிபதி கேஹர், ‘முத்தலாக் முறை இஸ்லாமிய வழக்கங்களுள் ஒன்றானது’ எனக் கூறியுள்ளார். இவ்வாறு நீதிபதிகள் குழு வெவ்வேறு மாறுபட்ட தீர்ப்புகளை அளித்துள்ளனர்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close