Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமைச்சரவையில் அமித்ஷா...? - தில்லியில் நடப்பது என்ன ?

டுத்த பாராளுமன்றத் தேர்தலை மையப்படுத்தி பி.ஜே .பி-யின் தேசிய தலைவர் அமித்ஷா நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். காஷ்மீரில் தொடங்கிய இந்தப் பயணத்தின் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 22, 23, 24 ஆகிய மூன்று நாட்கள் அமித்ஷா, தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாகவும் அறிவிக்கப்பட்டது. முதல் ஒன்றரை நாள் சென்னையிலும், அடுத்த ஒன்றரை நாள் கோவையிலும் கழிப்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. சுற்றுப்பயணத்தின்போது, தொண்டர்கள் வீடுகளுக்குச் சென்று சாப்பிடுவது, மாநில நிர்வாகிகளைச் சந்திப்பது, மாவட்டத் தலைமை நிர்வாகிகளைச் சந்திப்பது போன்ற டிஸ்கஷன்களும் ஷெட்யூலில் இடம்பிடித்திருந்தன. இந்த நிலையில் அமித்ஷாவின் தமிழ்நாடு சுற்றுப்பயணம் தள்ளிவைக்கப்பட்டதாக பி.ஜே .பி தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அமித்ஷா

'பி.ஜே .பி ஆளும் மாநில முதல்வர்கள் கூட்டத்தைத் தில்லியில், பிரதமர் மோடி கூட்டியுள்ளார். அதில் பங்கேற்பதால், இப்பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது ' என்கின்றனர் பி.ஜே .பி மாநில நிர்வாகிகள்.ஏற்கெனவே இதேபோல மே -10 ம் தேதி அமித்ஷா, தமிழ்நாட்டுக்கு மூன்று நாள்  சுற்றுப்பயணம் மேற்கொள்வதாகத் திட்டமிடப்பட்டு பிறகு அது ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போதைய சுற்றுப்பயணமும் தள்ளிவைக்கப்பட இது பி.ஜே .பி தொண்டர்களிடம் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.

உண்மையான  காரணம் என்ன ?

"அ.தி.மு.க-வில், ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் என பிரிந்து நிற்கும் இரண்டு அணிகளும் திங்கட்கிழமை ( 21.8.17) மாலை ஒன்றிணைந்தனர். ஏற்கெனவே 'அணிகள் இணைப்புக்குப் பின்னால் இருந்து இணைப்புப் பணிகளை முடுக்கி வருவது பி.ஜே .பி ' என்ற கருத்து பரவலாக உள்ளது. இந்தச் சூழலில் தமிழ்நாடு சுற்றுப்பயணம் மேற்கொள்வது, அந்த விமர்சனத்தை உறுதிப்படுத்துவதாக அமையும் என்று மூத்த தலைவர்கள் ஆலோசித்தே, அமித்ஷா பயணத்தைத் தள்ளி வைத்தனர்" என்கின்றனர் மாநில நிர்வாகிகள். அதேநேரம், இதுமட்டுமே முரளிதர்ராவ் -பி.ஜே .பி-யின் தமிழ்நாடு மேலிட  பொறுப்பாளர்காரணம் என்று சொல்லிவிட இயலாது. வேறு சில முக்கிய ஆலோசனைகளும்  அலசப்பட்டுள்ளன" என்கின்றது டில்லி வட்டாரம். "முக்கியப் பதவிக்குள் அமித்ஷாவைக் கொண்டு வருவது ஆட்சிக்கு வலு சேர்க்கும் என்ற ஆலோசனை கட்சியில், நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. அந்த அடிப்படையில் அமித்ஷாவுக்கு பாதுகாப்பு மந்திரி பதவி கொடுக்கலாம் என்று பேசப்படுகிறது. இது உறுதியானால்,  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஜெ.பி நட்டா,  பி.ஜே .பி தேசியத் தலைவராக நியமிக்கப்படலாம்'' என்றும் மூத்த தலைவர்கள் பேசினர் . மேலும்,  2019-ல் வரப்போகிற நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே 2018 அக்டோபர், நவம்பர் மாதத்தில் நடத்தவும் பேசப்பட்டு வருகிறது. 'பி.ஜே .பி-க்கு நல்ல பெயர் இருக்கும்போதே நடத்தி, மீண்டும் ஐந்தாண்டுகளைக் கைப்பற்ற வேண்டும்' என்ற கருத்தும் தில்லியில் அலசப்பட்டுள்ளது. இது போன்ற முக்கிய விஷயங்கள் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருவதும் , அமித்ஷாவின்  தமிழ்நாடு சுற்றுப்பயணம் தள்ளிப் போனதற்கான ஒரு காரணம்" என்கிறது டில்லி பி.ஜே .பி சோர்ஸ்கள்.

இதுகுறித்து விளக்கமறிய பி.ஜே .பி-யின் தமிழ்நாடு மேலிட  பொறுப்பாளர் முரளிதர்ராவிடம் பேசினோம்.

"யூகங்களுக்கெல்லாம் பதில் சொல்ல இயலாது. இந்திய தேசிய மக்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் பணிகளில் எங்கள் பி.ஜே .பி மிக வேகமாக செயல்பட்டு வருகிறது. தேசிய தலைவர்களின் செயல்பாடுகளும் அதைச் சுற்றியே இயங்குகின்றன" என சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

யூகங்கள் எல்லாம் உண்மையில்லை; ஆனால், பெரும்பாலான உண்மைகளுக்கு தொடக்கமாக யூகங்களே இருக்கின்றன என்பதும் உண்மையே!

 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close