Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க முடியாது' - மத்திய அரசு திடீர் 'பல்டி'

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. 

நீட் தேர்வு

மருத்துவப் படிப்புகளுக்குத் தேசியப் பொது நுழைவுத்தேர்வு (நீட்) கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டே நீட் தேர்வு நடைபெற்றது. ஆனால், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இதற்கு எதிர்ப்புக் கிளம்பியதால், கடந்த ஆண்டு நீட் தேர்விலிருந்து மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.


இதனிடையே, நடப்பு கல்வியாண்டில் நீட் தேர்வு நடைபெற்றது. இருந்தபோதும், மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவதற்கு தமிழக அரசு முயற்சி செய்தது. இதைத்தொடர்ந்து, நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்பதற்காக தமிழக அரசு, சட்ட வரைவு ஒன்றை இயற்றியது. இதற்கு மத்திய சுகாதாரத்துறை, மனிதவளமேம்பாட்டுத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்திருந்தன. இதனால், நீட் தேர்விலிருந்து இந்த ஆண்டு தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


இந்நிலையில், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'நீட் தேர்விலிருந்து ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது. எனவே, தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க முடியாது' என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் செய்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் உடனடியாகக் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்றும், செப்டம்பர் 4-ம் தேதிக்குள், நீட் தேர்வின் அடிப்படையில் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close