Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரசு பஸ்ஸை ’ஹைஜாக்’ செய்த தொழிலாளி! - 'ஷூ'வால் சிக்கிய கொடுமை

இரவில் ஊருக்குச் செல்ல பேருந்து வசதி இல்லாததால், அரசுப் பேருந்தைக் கடத்திய தொழிலாளியை கேரள போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான அலோஸ் என்பவர் வேலைக்குச் சென்று விட்டு ஊர் திரும்ப கொல்லம் அரசுப் பேருந்துப் பணிமனைக்கு வந்துள்ளார். இரவு நீண்ட நேரமாகியதால் அலோஸ் ஊருக்குச் செல்ல பேருந்து வசதி இல்லை. இதனால் அவர் நள்ளிரவில் கொல்லம் பேருந்துப் பணிமனையைச் சுற்றி சுற்றி வந்துள்ளார். அப்போது அங்கு நின்ற பேருந்து ஒன்றில் ஏறிப் பார்த்த போது, அந்தப் பேருந்து சாவி அப்படியே இருந்துள்ளது. உடனே அந்தப் பேருந்தை ஸ்டார்ட் செய்து தனது ஊருக்கு ஓட்டிச் சென்றார். இதை யாரும் சரியாகக் கவனிக்கவில்லை.

பஸ், பஸ் ஸ்டான்ட்டை விட்டு சிறு தூரம் வெளியே வந்ததும் ஒரு வளைவில் திருப்ப முயன்ற போது, அலோஸால் திருப்ப முடியவில்லை. அதனால் சாலையோரம் நின்ற கம்பத்தில் மோதி உள்ளார். உடனே அலோஸ் பயந்து கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார். விட்டுச் சென்ற பின்தான் தனது ஷூக்களை பஸ்ஸில் விட்டு விட்டு வந்தது நினைவுக்கு வந்தது. அந்த ஷூக்களை அலோஸ் மிகவும் ஆசைப்பட்டு வாங்கி இருந்ததால் அதை விட்டு விட மனமில்லாமல் அந்த ஷூக்களை திரும்ப எடுப்பதற்காக பஸ்ஸூக்கு வந்துள்ளார்.

அதற்குள் விபத்து பற்றி அறிந்த போலீஸாரும்,மின்சாரத் துறை ஊழியர்களும் ,பொதுமக்களின் உதவியோடு பஸ் மீட்பு பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் நைஸாக பஸ்ஸில் ஏறி தனது ஷூக்களை எடுக்க முயன்ற போது அலோஸை போலீஸார் பிடித்து விட்டனர். அதன்பின் நடந்த  விசாரணையின் போது அவர் மது போதையில் இருந்துள்ளார். அவரைக் கைது செய்த போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள்.கேரளாவில் முக்கிய நகரமான கொல்லத்தில் பஸ் கடத்தல் சம்பம் நடந்துள்ளது, போக்குவரத்துத் துறை ஊழியர்களைக் கலக்கமடையச் செய்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close