Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பட்ஜெட் விலையில் டூயல் கேமரா மொபைல்கள்... எதை வாங்கலாம்? #AwesomeAndroid

"ஒரு DSLR கேமரா கிடைச்சா போதும் பாஸ்... செம கெத்து காட்டலாம்னு பாத்தா ரேட்தான் கொஞ்சம் அதிகமாக இருக்குது" என நினைக்கிறவங்களுக்கு இருக்கவே இருக்குது டூயல் கேமரா ஸ்மார்ட்போன்கள். ஸ்மார்ட்போன் வசதிகளில் புதிய அப்டேட் டூயல் கேமரா ஸ்மார்ட்போன்கள். DSLR கேமராக்களில் இருக்கும் Bokeh effect போன்ற ஒரு சில வசதிகளை கூட இதில் உண்டு.  DSLR லெவலுக்கு இல்லையென்றாலும் இதன் மூலமாக கொஞ்சம் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும்.

பட்ஜெட் மற்றும் மீடியம் பட்ஜெட் செக்மென்டில் டூயல் கேமரா கொண்ட  சிறந்த ஸ்மார்ட்போன்கள் இவைதாம்.

Micromax Evok Dual Note

Micromax Evok Dual Note

 

 

  • 5.5 இன்ச் திரை
  • மீடியாடெக் ஆக்டாகோர் பிராசஸர்
  • 13+5 மெகாபிக்சல் டூயல் பின்புற கேமரா, 5 மெகாபிக்சல் முன்புற கேமரா
  • 3000 mAh பேட்டரி திறன்
  • ஆண்ட்ராய்டு 7.0 நொளகட் இயங்குதளம்

இந்திய நிறுவனமான மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் அண்மை வெளியீடு. பத்தாயிரம் ரூபாய்க்கு கீழே சிறப்பான வடிவமைப்பை கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்.மெட்டல் பாடி வடிவமைப்பு மற்றும் முன்புற கைரேகை சென்சார் வசதி இருக்கிறது.

விலை

3 ஜிபி ரேம் + 32 ஜிபி இன்டர்னல்-9,999
4 ஜிபி ரேம் + 32 ஜிபி இன்டர்னல் - 11,499
 

Coolpad Cool 1 dual

Coolpad cool 1

  • 5.5 இன்ச் திரை
  • ஸ்னாப்டிராகன் 652 ஆக்டாகோர் பிராசஸசர்
  • 13+13 மெகாபிக்சல் PDAF கேமரா
  • 8 மெகாபிக்சல் முன்புற கேமரா
  • 4060 mAh பேட்டரி திறன்
  • ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ இயங்குதளம்

இதில் இருக்கும் 13+13 மெகாபிக்சல் டூயல் கேமரா மூலமாக சிறந்த புகைப்படங்களை எடுக்க முடியும். குறைவான விலை சிறந்த கட்டமைப்பு திறன் ஆகியவை இதன் சிறப்புகள். ஆனால் மெமரிகார்டு வசதி இல்லாதது, சார்ஜ் ஏற சற்று அதிக நேரம் ஆகும் போன்றவை இதன் குறைகள்.

விலை

3ஜிபி ரேம்+ 32 ஜிபி இன்டர்னல் மெமரி-10,999

4 ஜிபி ரேம்+ 32 ஜிபி இன்டர்னல் மெமரி-12,960


Lenovo K8 Note

Lenovo K8 Note

 

 

  • 5.5 இன்ச்  திரை.
  • கொரில்லாகிளாஸ் பாதுகாப்பு வசதி.
  • மீடியாடெக் ஹீலியோ X23 டெக்கா கோர் ப்ராசஸர்.
  • 13 +5 மெகாபிக்சல் PDAF  பின்புற கேமரா.
  • 13 முன்புற கேமரா மற்றும் ஃபிளாஷ் வசதி.
  • கைரேகை சென்சார் வசதி Dolby ATMOS  மற்றும் TheaterMax
  • 4000 mAh பேட்டரி மற்றும் டர்போ சார்ஜிங் வசதி
  • ஆண்ட்ராய்டு 7.1.1 நொளகட் இயங்குதளம்

மீடியம் பட்ஜெட் விலையில் சிறந்த வசதிகளை கொண்டிருக்கிறது  லெனொவோ K8. Dolby ATMOS,TheatreMax என பொழுதுபோக்கிற்கான அம்சங்கள் இதன் சிறப்புகள்.ஒரே நேரத்தில் இரண்டு சிம் கார்ட் மற்றும் மெமரி கார்டு பயன்படுத்தும் வசதியும் இருக்கிறது. 4000 mAh பேட்டரி திறன் இருந்தாலும் வேகமான சார்ஜ் ஏற்றிக்கொள்ள முடியும்.

விலை

3ஜிபி ரேம்+ 32 ஜிபி இன்டர்னல் -12,999

4 ஜிபி ரேம்+ 64 ஜிபி இன்டர்னல் மெமரி-13,999

Motorola Moto G5S plus

டூயல் கேமரா கொண்ட Motorola Moto G5S plus

  • 5.5 இன்ச் திரை
  • கொரில்லாகிளாஸ் 3 பாதுகாப்பு வசதி
  • ஸ்னாப்டிராகன் 625 ஆக்டாகோர் பிராசஸசர்
  • 13+13 மெகாபிக்சல் பின்புற கேமரா
  • 8 மெகாபிக்சல் முன்புற கேமரா ஃபிளாஷ் வசதியுடன்
  • 3000 mAh பேட்டரி திறன்
  • ஆண்ட்ராய்டு 7.1 நொளகட் இயங்குதளம்

மோட்டோரோலா நிறுவனம் இரண்டு நாட்களுக்கு முன்புதான் இந்த ஸ்மார்ட்போனனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. மெட்டல் கட்டமைப்பு ,வேகமான சார்ஜ் ஏறும் திறன் ஆகியவை இதன் சிறப்புகள்.ஹைபிரிட் சிம் ஸ்லாட் பயன்பாடு பேட்டரி திறன் குறைவு ஆகியவை இதன் குறைகள்.

விலை

4 ஜிபி ரேம்+ 64 ஜிபி இன்டர்னல் மெமரி-15,999

டூயல் கேமரா மொபைல்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை தொடர்ந்து அடுத்தடுத்து இந்தியாவில் அறிமுகமாக தயாராக இருக்கின்றன பல ஸ்மார்ட்போன்கள்.அடுத்த மாதம் 5ம் தேதி ஜியோமி நிறுவனம் இந்தியாவில் தனது முதல் டூயல் கேமரா ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயராகி வருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close