Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உங்கள் இ-வாலட்டில் இருக்கும் பணம் பாதுகாப்பாக இருக்கிறதா?

வாலட்

இ-வாலட்கள் டெங்குவை விட வேகமாகப் பரவி வருகின்றன. வசதியாக இருப்பது, கையில் ரொக்கமாக வைத்திருக்கத் தேவையில்லை என்பது போல பல நல்ல விஷயங்கள் இருப்பதால் மக்களும் இவற்றை அதிகம் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். இ-வாலட் நிறுவனங்கள் தரும் தள்ளுபடிகளும், கேஷ்பேக் ஆஃபர்களும் இன்னும் அதிகமானோரை இ-வாலட் பக்கம் திருப்பி வருகிறது.
இ-வாலட் பயனர்கள் செய்ய வேண்டிய விஷயங்களை அந்தந்த நிறுவனங்களே சொல்லித் தந்துவிடுகின்றன. அதிலும் கவனமாக இருக்க வேண்டிய சில பாதுகாப்பு வழிகளைப் பார்க்கலாம்.

டவுன்லோடு:
அதிகாரபூர்வ ஆப் ஸ்டோர்களிலிருந்துதான் இந்த ஆப்களைத் தரவிறக்க வேண்டும். மற்ற இணையதளத்திலிருந்தோ, மின்னஞ்சல் அல்லது ப்ளூடூத் மூலமாக யாராவது அனுப்பினாலோ அவற்றை இன்ஸ்டால் செய்ய வேண்டாம். அவ்வப்போது வரும் ஆப் அப்டேட்களைத் தவறாமல் செய்துவிடவும்.

பாஸ்வேர்டு:
இப்போது கைரேகை ஸ்கேனர் வந்துவிட்டதால் பெரும்பாலானோர் அதை ஆக்டிவேட் செய்துவிடுகிறார்கள். அந்த வசதி இல்லாத மொபைல் வைத்திருந்தால் உடனே பாஸ்கோடு போட்டுவிடவும்.

அதிகப் பணம் வைத்திருக்க வேண்டாம்:
பெரும்பாலும் இ-வாலட் பயன்படுத்துகிறவர்கள் பெரிய தொகை இருக்கும் பொருள்களை அதன் மூலம் வாங்குவதில்லை. சிறிய அளவிலான ட்ரான்ஸாக்‌ஷனுக்குதான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. எதுவாக இருந்தாலும், இ-வாலட்களில் அதிகப் பணம் வைக்க வேண்டாம். தேவையானபோது அப்லோடு செய்துகொள்ளலாம்.

கிரெடிட் /டெபிட் கார்டு தகவல்கள்:
நேரத்தை மிச்சப்படுத்த கிரெடிட் அல்லது டெபிட் கார்டு தகவல்களைச் சேமித்து வைக்கும் ஆப்ஷன் இருக்கும். எப்போதும் அதை செய்துவிட வேண்டாம். முடிந்தவரை, ஒவ்வொரு டிரான்ஸாக்‌ஷன் போதும் அதை எண்டர் செய்வதே பாதுகாப்பானது.

பாஸ்வேர்டை மாற்றுங்கள்:
மின்னஞ்சலுக்கு மட்டுமல்ல; மொபைல் மற்றும் இ-வாலட் பாஸ்வேர்டுகளும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றப்பட வேண்டும். மொபைலுக்கும், இ-வாலட்டுக்கும் ஒரே பாஸ்வேர்டு வைப்பதை தவிர்க்கவும்.

wallet

விளம்பர கால்கள்:
தொலைபேசிவழி  யாராவது அழைத்து இ-வாலட் பற்றியத் தகவல்கள் கேட்டால், அதைப் பகிராதீர்கள். குறிப்பாக பாஸ்வேர்டு போன்றத் தகவல்களை எந்த இ-வாலட் நிறுவனமும் தொலைபேசியில் கேட்காது என்பதைக் கவனத்தில்கொள்ளுங்கள்.

மின்னஞ்சல்:
இ-வாலட் மூலம் நடக்கும் பரிவர்த்தனைகள் பற்றிய விவரங்களைப் பொதுவாக குறுஞ்செய்தி மூலம் நாம் பெறுவோம். அதோடு சேர்த்து மின்னஞ்சல் நோட்டிஃபிகேஷனும் ஆக்டிவேட் செய்துகொள்ளுங்கள். ஏனெனில், சில சமயங்களில் குறுஞ்செய்தி வருவது தாமதமாகலாம்; அல்லது வராமலும் போகலாம்.

டபுள் செக்:
மொபைல் மற்றும் டிடிஎச் ரீசார்ஜுகள்தான் மொபைல் வாலட்கள் மூலம் அதிகம் செய்யப்படுகின்றன. இதைச் செய்யும்போது மொபைல் எண் மற்றும் டிடிஎச் ரெஜிஸ்ட்ரேஷன் எண்களைக் கவனமாக டைப் செய்யவும். தவறான எண்களுக்கு ரீசார்ஜ் ஆகிவிட்டால் அதைத் திரும்பப் பெற இயலாது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close