Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மொபைல் சண்டையில் ஏர்டெல் மற்றும் ஜியோ... யார் மொபைலில் வசதிகள் அதிகம்? #AirtelVsJio

ஏர்டெல் ஜியோ

4G. இந்த ஆண்டில் அதிகமாக உச்சரிக்கப்பட்ட வார்த்தைகளில் இதுவும் இடம்பெறும். ஜியோவின் அதிரடிக்குப் பின் 4ஜி மொபைல்களைத் தேடித்தான் அனைவரும் போனார்கள். 10,000 ரூபாய்க்கும் அதிகமான விலைகொண்ட மொபைல்களில் மட்டுமே இருந்த இந்தத் தொழில்நுட்பம் இப்போது பட்ஜெட் மொபைல்களிலும் வந்துவிட்டது. தங்கள் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையைக் கூட்ட ஏர்டெல்லும், ஜியோவும் இன்னும் குறைவான விலைக்கே 4ஜி மொபைல்களை களமிறக்குகிறார்கள். ஏர்டெல்லின் 4ஜி மொபைலை கார்பன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இரண்டு மொபைல்களின் டெக்னிக்கல் விஷயங்கள் வெளியாகியிருக்கும் நிலையில், இரண்டையும் ஒப்பிட்டு எந்த விஷயத்தில் யார் பெஸ்ட் என பார்க்கலாம்.

விலை:

ஏர்டெல் மொபைலின் விலை 2899. மொபைல் வாங்கிய பின் தொடர்ந்து 36 மாதங்கள் மாதம் 169 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். அப்படி செய்தால், 18 மாதம் கழித்து 500 ரூபாயும், அடுத்த 18 மாதங்கள் கழித்து 1000 ரூபாயும் கேஷ்பேக்காக கிடைக்கும். ஆக, 3 வருடங்கள் கழித்து மொபைலின் விலை 1399 தான் என்கிறது ஏர்டெல்.

ஜியோ இந்த சுத்தி விடும் வேலையை செய்யவில்லை. நேரிடையாகவே மொபைலின் விலை 1500 தான் என்கிறது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு அதுவும் கேஷ்பேக் ஆக கிடைத்துவிடும். ஆனால், மொபைலை திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்.

பேட்டரி:

ஏர்டெல் மொபைலின் பேட்டரி 1400mAh. 
ஜியோ மொபைல் 2000 mAh.

ரேம்:

ஏர்டெல் மொபைல் 1ஜிபி ரேம் கொண்டது.
ஆனால், ஜியோவில் 512 எம்.பி தான்

திரை:

ஏர்டெல் 4.1 இன்ச் டிஸ்ப்ளே.
ஜியோவில் 2.4 இன்ச்.

சிம் ஸ்லாட்:

ஏர்டெல் டூயல் சிம் கார்டு தருகிறது.
ஜியோவில் ஒரே ஒரு சிம் தான்.

ஆப்ரேட்டிங் சிஸ்டம்:

ஏர்டெல் மொபைலின் முக்கியமான ப்ளஸ் இது. ஆண்ட்ராய்டு ஓ.எஸ் என்பதால் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் அனைத்து ஆப்ஸும் இந்த மொபைலில் இன்ஸ்டால் ஆகும்.

ஆனால், ஜியோ மொபைலில் ஆண்ட்ராய்டு கிடையாது. அதனால், வாட்ஸ்அப் போன்ற மெஸெஞ்சர்களை அதில் பயன்படுத்த முடியாது. இதுதான் ஜியோ மொபைலின் மிகப்பெரிய குறை. 

கேமரா:

இரண்டிலும் 2 மெகாபிக்ஸல் கேமரா உண்டு.

மெமரி:

ஏர்டெல் மொபைலில் 8 ஜி.பி இன்டெர்னெல் மெமரி உண்டு. 32 ஜி.பி வரை கார்டு போட்டுக்கொள்ளலாம்.
ஜியோவில் 4 ஜி.பி இன்டெர்னெல் மெமரி. ஆனால், 128ஜி.பி வரை மெமரி கார்டு போட்டுக்கொள்ளலாம்.

நெட்வொர்க்:

ஏர்டெல் 4ஜி மொபைல் தந்தாலும் எப்போதும் 4ஜி சிக்னல் கிடைக்கும் எனச் சொல்லவில்லை. 4ஜி சிக்னல் இல்லாதபோது 3ஜி அல்லது 2ஜி நெட்வொர்க்குக்கு தானாக மாறிக்கொள்ளும். 

ஜியோ, எப்போதும் 4ஜிதான். அதனால் வேகம் அதிகம். அதே சமயம், சிறிய ஊர்களில் ஜியோ நெட்வொர்க் கிடைப்பதில் சிக்கல்கள் இருக்கலாம். 

ஏர்டெல் மொபைலில் எந்த சிம்மையும் போட்டுக்கொள்ளலாம். ஆனால், ஜியோவில் அந்த சிம் மட்டுமே போட முடியும்

ஜியோ

டேட்டா ப்ளான்:

ஏர்டெல் தினமும் 500எம்.பி டேட்டா இலவசமாக தருகிறது. அதைத் தாண்டினால் ஏர்டெல்லின் டேட்டா கட்டணம் கொஞ்சம் அதிகம்தான்.
ஜியோ அன்லிமிட்டெட் டேட்டா சேவையைத் தருகிறது.

விலை விஷயத்தில் ஜியோ ஏர்டெல்லை விட மலிவுதான். ஆனால், ஏர்டெல் மொபைல் தரும் வசதிகளில் பல ஜியோவில் கிடையாது. மாதம் 160 ரூபாய் மொபைல் சேவைக்காக செலவுச் செய்ய தயாராயிருக்கும் வாடிக்கையாளர்களைதான் இருவருமே குறி வைக்கிறார்கள். அப்படியிருக்கும்போது நல்ல வசதிகள் கொண்ட மொபைலுக்காக அவர்கள் சில நூறு ரூபாய்களை கூடுதலாக செலவு செய்ய நிச்சயம் முன்வருவார்கள். அந்த இடத்தில்தான் ஏர்டெல் ஸ்கோர் செய்கிறது.

3 ஆண்டுகள் பயன்படுத்தினால் கேஷ்பேக் என இருவரும் சொல்கிறார்கள். இந்த டெக்னாலஜி யுகத்தில் 3 ஆண்டுகளில் என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம். இலவசமாகவே அழைப்புகள் செய்யக் கூட வாய்ப்புகள் வரலாம். அந்த விஷயத்தில்தான் இருவருமே கோட்டை விடுகிறார்கள் எனச் சொல்லலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close