Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இனி இல்லை 'பேட்டரி லோ': வந்துவிட்டது புதிய சார்ஜர்!

ன்றைய நவீன யுகத்தில் மொபைல் போன்கள் 24 மணி நேர தேவையாகி விட்டது. குறிப்பாக அழைப்புகள், குறுஞ்செய்திகள், சமூக வலைதளங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் என எல்லாவற்றையும் இந்த மொபைல் போன்கள் வழங்கி வருகின்றது.

மொபைல் போன்கள் மனித வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டன. தொழில்நுட்ப பயன்பாடுகளில் முக்கிய பங்காற்றும் இவைகளில் சில பிரச்னைகளும் இருக்கத் தான் செய்கிறது.

இன்றைய ஸ்மார்ட் போன் தலைமுறையினருக்கு பெரும் தலைவலியாக இருப்பது 'பேட்டரி லோ' என்னும் அலறல் தான். எந்நேரமும் மொபைல் போன்களில் சார்ஜ் புல்லாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் அமைந்துள்ளது.

அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த 'ஸ்டோர் டாட்' நிறுவனம் நானோ டெக்னாலஜி மூலம் 30 விநாடிகளில் செல்போன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும் புதிய வகை சார்ஜரைக் கண்டுபிடித்திருக்கிறது.

இந்த சார்ஜர் தற்போது உள்ள சார்ஜரை விட 100 மடங்கு வேகமாக சார்ஜரை பூஸ்ட் செய்யும் ஆற்றல் கொண்டது. 8 மாதங்களுக்கு முன்னதாகவே இதே போன்ற ஒரு கருவியை இந்நிறுவனம் சோதனை செய்து காட்டியது. ஆனால், அந்த கருவி நடைமுறையில் எளிதாக பயன்படுத்த முடியாத வகையில் தடிமனாகவும், அளவில் பெரியதாகவும் இருந்தது. எனவே, அதனை மறுஆய்வு செய்து மீண்டும் வடிவமைத்துள்ள, புதிய கருவி அளவில் சிறியதாகவும், தற்போதுள்ள ஸ்மார்ட் போன்களுக்கு ஏற்றதாகவும் உள்ளது.

மொபைல் போன் வரலாற்றிலேயே புதிய புரட்சியை ஏற்படுத்த காத்திருக்கிறது இந்த சார்ஜர். மொபைல் போன்கள் மட்டுமன்றி, டேப்லட்டுகள், லேப்டாப்கள், கைகளில் அணியும் ஸ்மார்ட் வாட்ச் போன்றவற்றின் பேட்டரியையும் நொடிகளில் நிரப்புகிறது இந்த சார்ஜர்.

இனி 'பேட்டரி லோ' என்ற கவலையே தேவை இல்லை!

இரா.த.சசிபிரியா
(மாணவப் பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ