Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிளாக்பெரியின் டச் ஸ்கிரீன் போன் அறிமுகம்!

கீபோர்டு கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு பெயர்பெற்ற பிளாக்பெரி நிறுவனம்,  லீப் எனும் டச் ஸ்கிரீன் போனை அறிமுகம் செய்துள்ளது. ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெறும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் கண்காட்சியில் இந்த போன் அறிமுகமாகி இருக்கிறது.

ஸ்மார்ட்போன் சந்தையில் ஐபோனும், ஆண்ட்ராய்டு போன்களும் கோலோச்சினாலும் பிளாக்பெரிதான் இந்த சந்தையின் முன்னோடி நிறுவனம். செல்போன் பேசுவதற்கு மட்டுமே என கருதப்பட்ட காலத்திலேயே கனடா நிறுவனமான பிளாக்பெரியின் போன்கள், மெயில் அனுப்புவது உள்ளிட்ட வசதிகளோடு கவனத்தை ஈர்த்தது.

பெரும்பாலும் வர்த்தக நிறுவன அதிகாரிகளின் விருப்பத்தேர்வாக கருதப்பட்ட பிளாக்பெரி பலரும் அன்னாந்து பார்க்க கூடியதாக ஸ்மார்ட்போனாக கோலோச்சியது.

ஆனால் ஆப்பிளின் ஐபோன் அறிமுகம் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களின் எழுச்சிக்கு பிறகு நிலைமை மாறிவிட்டது. ஸ்மார்ட்போன்கள் பரவலாகத் துவங்கியது மட்டும் அல்லாமல் பட்ஜெட் போன்களும் அறிமுகமாகவே பிளாக்பெரி தனித்துவிடப்பட்டது. ஸ்மார்ட்போன் சந்தையில் ஏற்பட்ட சூறாவளி, பிளாக்பெரியின் முன்னோடி நிலையை கேள்விக்குள்ளாக்கியது. இதனிடையே பிளாக்பெரியின் விற்பனையும் சரிந்து வருகிறது. 

இந்நிலையில் பார்சிலோனா காட்ஜெட் கண்காட்சியில் மற்ற நிறுவனங்களோடு போட்டி போட்டிக்கொண்டு பிளாக்பெரியும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருக்கிறது. ஆச்சர்யம் அளிக்கும் வகையில் பிளாக்பெரி, கீபோர்டு இல்லாத டச் ஸ்கிரீன் போனை அறிமுகம் செய்திருக்கிறது. பிளாக்பெரி என்றாலே நினைவுக்கு வருவது அதன் உள்ளங்கை அகல தோற்றமும் அதில் கீழ்ப்பகுதியில் இருக்கும் கீபோர்டும் தான். பிளாக்பெரியின் தனித்தன்மையும் இந்த கீபோர்டுதான். ஆரம்ப காலத்தில் இமெயில் அடிக்க உதவியதும் இந்த கீபோர்டுதான்.

ஆனால் உலகமே டச் ஸ்கிரீனுக்கு மாறியிருக்கும் காலத்தில் பிளாக்பெரியும் டச் ஸ்கிரீன் பக்கம் வந்திருக் கிறது. பார்சிலோனாவில் 'பிளாக்பெரி லீப்' எனும் பெயரில் டச் ஸ்கிரீன் போன் அறிமுகமாகி இருக்கிறது. நிறுவனம் இதற்கு முன்னரே டச் ஸ்க்ரின் போனை அறிமுகம் செய்திருந்தாலும் , கீபோர்ட் மாதிரியிலேயே தொடர்ந்து கவனம் செலுத்துவோம் எனும் பிடிவாதத்தை இதன் மூலம் நிறுவனம் தளர்த்திக் கொண்டு ள்ளது.

8 மெகாபிக்சல் காமிரா மற்றும் மால்வேர் பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் இதில் உள்ளன. இன்னொரு முக்கியமான விஷயம் இதன் விலையும் நடுத்தர பிரிவில் அமைந்திருப்பதாக கருதப்படுகிறது. ஆனால், எல்ஜி, சோனி, மோட்டரோலா மற்றும் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் எல்லாமே இதே விலைப் பிரிவில் ஸ்மார்ட்போன்களை இறக்கியிருக்கும் நிலையில் பிளாக்பெரியால் தாக்கு பிடிக்க முடியுமா என்று கேட்கப்படுகிறது. முடியுமா என்பதைவிட பிளாக்பெரிக்கு வேறு வழியில்லை என்றே சொல்லப்படுகிறது.

ஜியோமி போன்ற புதிய நிறுவனங்கள் அசத்தும் ஸ்மார்ட்போன் சந்தையில் நீடித்திருக்க வேண்டும் என்றால் காலத்திற்கு ஏற்ப மாறியாக வேண்டும் என்கின்றனர். பிளாக்பெரியும் இதை உணர்ந் திருப்பதாகவே தெரிகிறது.

அது மட்டும் அல்ல, பிளாக்பெரி தனது ஸ்மார்ட்போனின் தனித் தன்மை மிக்க அம்சங்களை மற்ற போன்களுக்கும் திறந்துவிட் டுள்ளது. அதன் சேவைகளை எக்ஸ்பீரியன்ஸ் சூட் எனும் பெயரில் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க பிளாக்பெரி தீர்மானித்திருக்கிறது.

ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு போல பிளாக்பெரி தனக்கென தனியுரிமை இயங்கு தளத்தை கொண்டிருக்கிறது. பல விஷேச பயன்பாட்டை அது பெற்றிருக்கிறது.

இந்த சிறப்புகளை எல்லாம் மாற்று இயங்கு தளத்திலும் பயன்படுத்திக் கொள்ள பிளாக்பெரி அனுமதி அளித்துள்ளது பெரிய மாற்றம்தான். சமீபத்தில் ஆண்ட்ராய்டு செயலிகளை தனது போன்களில் பயன்படுத் தும் வசதியை அளிக்கவும் பிளாக்பெரி முன் வந்திருப்பது குறிப்பிடத் தக்கது.

எல்லாம் சரியான திசையிலான மாற்றங்கள்தான் என்கின்றனர் ஸ்மார்ட்போன் வல்லுனர்கள். ஆனால் கொஞ்சம் தாமதமாக மேற் கொள்ளப்படும் மாற்றங்களோ என்று மட்டுமே அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

- சைபர்சிம்மன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close