Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2017ல் பறக்கும் கார்கள்..!

லகின் முதல் தானியங்கி பறக்கும் கார்கள் வரும் 2017ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் என ஏரோமொபில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜீராஜ் வகுலிக் தெரிவித்துள்ளார்.

‘‘கடந்த ஐந்து ஆண்டுகளாக இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் எங்கள் நிறுவனம் தற்போது இறுதிகட்ட வடிவமைப்புப் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. எளிதில் பயன்படுத்தும் வகையில் இந்தக் காரை பெட்ரோலில் இயங்கும் திறன் கொண்டதாக தயாரித்து வருகிறோம்.

இந்த நவீன பறக்கும் காரில் ஒரே நேரத்தில் இருவர் அமர்ந்து பயணம் செய்யும் வகையிலும், மனிதர்களே ஓட்டும் வகையில் ஒரு மாடலும், தானியங்கி முறையில் இயங்கும் மற்றொரு மாடலுமாக இரண்டு மாடல்களிலும் வடிவமைக்கப்பட்டு வருகிறது. கூடிய சீக்கிரத்தில் பறக்கத் தயாராக இருங்கள் காரில்!’’ என்றார் ஜீராஜ் வகுலிக்.

பறக்கும் கார் எப்படி சாத்தியம்?

விஞ்ஞான உலகில் எல்லாம் சாத்தியம் என்பதற்கு இது மேலுமொரு உதாரணம். இதற்காக, சில நூறு அடிகள் நீளத்தில் ஒரேயொரு செயற்கை புல்தரை பட்டை மட்டும் இருந்தால் போதும். சாதாரண கார் போல தரையில் வேகமாக ஓடி, பின்னர் குட்டி விமானம் போல உயரக் கிளம்பி, 400 மைல் தூரம் கொண்ட இடத்தை இதன் மூலம் மிக விரைவாகச் சென்றடையலாம்.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பறக்கும் காரின் விலை என்னவாக இருக்கும் என்பது பற்றிய கேள்விகள் எழுந்துவரும் நிலையில்... சராசரி பணக்காரர்களுக்கு இந்தப் பறக்கும் கார் எட்டா கனவாகவே இருக்கும் என்கிறார்கள் துறை சார்ந்த நிபுணர்கள்.

உலகக் கோடீஸ்வரர்கள் பறக்கலாம் போல!

-சா.வடிவரசு

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close