Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மும்பையில் யூ- ட்யூப் ஃபேன் ஃபெஸ்ட் - வைரல் சங்கமம்!

ன்றைக்கு இருக்கும் இணையதள உலகத்தில் எல்லாமே வைரல்தான். ஐஸ் பக்கெட் சேலஞ்ச் தொடங்கி நம்ம ஊர் ஐ பட ஆடியோ லான்ச் வரைக்கும் எல்லாமே செம வைரல்தான். இதுதவிர உலகம் முழுக்க எத்தனையோ வீடியோக்கள் ஒவ்வொரு நிமிஷத்துக்கும் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

இந்த வைரல் வீடியோக்களை வரவேற்கும் விதமா ஒரு நிகழ்ச்சியை யூ-ட்யூப் நடத்துகிறது. இது உலகம் முழுவதும் நடத்தப்பட உள்ள நிலையில், இதன் முதல் நிகழ்ச்சி இன்றைக்கு மும்பையில் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் 31 பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இவர்களது மொத்த சப்ஸ்க்ரைபர் ( subscriber) எண்ணிக்கை 30 மில்லியனை தாண்டும் என்கிறது யூ-ட்யூப்.

இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பல பகுதிகளிலும் உள்ள ட்ஜிட்டல் ஆர்வலர்கள் 5000 பேர் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இதில் முக்கியமாக சூப்பர் வுமன், என்னடா ராஸ்கல்ஸ் வீடியோ வைரல் பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.

இவர்கள் தங்கள் ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார்கள். தங்கள் வைரல் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் விதமாகவும் இந்த நிகழ்ச்சி அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வீடியோக்கள் அதிகமாக பிரபலமடைவதாகவும், ரசிகர்கள் வீடியோக்களில் புதுமையையும், ரசிப்புத்தன்மையையும் விரும்புகிறார்கள் என்றும் யூ-ட்யூப் கூறியுள்ளது.

மாதத்துக்கு ஒரு பில்லியன் புதிய பயன்பாட்டாளர்கள் யூ-ட்யூபில் இணைகிறார்கள். ஒரு மாதத்தில் 6 பில்லியன் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. உலகம் முழுவதும் ஒரு நிமிடத்தில் 300 மணி நேரத்துக்கான வீடியோ பதிவேற்றம் செய்யப்படுவதாக யூ-ட்யூப் கூறியுள்ளது. இன்று இந்தியாவில் நடக்கும் இந்தி நிகழ்ச்சியைபோல் ஆறு நாடுகளில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சி பற்றிய வீடியோ பதிவு: https://www.youtube.com/watch?v=4Snbrdr2imY&list=PL0y6ScMLZlESqGpqbI1Y6om_oZ22lHq58

விகடன் யூ-ட்யூப் சேனலின் வைரல் வீடியோக்களுக்கு க்ளிக் செய்க: https://www.youtube.com/vikatanwebtv

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ