Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மைக்ரோசாஃப்ட் லூமியாவுக்கு MS-DOS ஆபரேட்டிங் சிஸ்டம்!

MS-DOS ஆபரேட்டிங் சிஸ்டத்தை மறக்க முடியுமா? இன்று விண்டோஸ் கம்ப்யூட்டரில் ஒரு பெரிய பிரச்னை என்றாலும், MS-DOS தெரிந்தால் சரி செய்து விடலாம்.

கிட்டத்தட்ட இன்றைய இளம் தலைமுறை இந்த ஆபரேட்டிங் சிஸ்டத்தை மறந்துவிட்ட நிலையில், லூமியா ஃபோன் மூலம் MS-DOS-க்கு மீண்டும் உயிரூட்டியுள்ளது மைக்ரோசாஃப்ட்.

ஆம், லூமியா ஃபோனில் இப்போது MS-DOS ஆபரேட்டிங் சிஸ்டத்தை நிறுவிக்கொள்ளலாம்.

பேஸிக்கான கமாண்டுகள் தவிர, ஃபோனின் கேமரா, இண்டர்நெட் போன்றவற்றை MS-DOS கமாண்ட் ப்ராம்ப்ட் மூலமே இயக்க முடியும்.

பழைய ஸ்டைலிலேயே பிளாக் அண்டு வொயிட் கலரில், cd, dir கமாண்டுகள் இருப்பது அழகு.

நீங்கள் லூமியா ஃபோன் வைத்திருந்தால் இந்த ஆபரேட்டிங் சிஸ்டத்தை இன்ஸ்டால் செய்து பாருங்கள். கேம்ஸ் கூட உள்ளன.

அதற்குமுன், மைக்ரோசாஃப்ட் வெளியிட்டிருக்கும் இந்த வீடியோவையும் பார்த்துவிடுங்கள். காரணமா சொல்றோம். வீடியோவ முழுசா பாருங்க!

-ர. ராஜா ராமமூர்த்தி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ